செய்திகள் :

Vaadivaasal: ``அகிலம் ஆராதிக்க `வாடிவாசல்' திறக்கிறது" - தயாரிப்பாளர் தாணு

post image
வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படம் `வாடிவாசல்'.

சி.சு. செல்லப்பாவின் `வாடிவாசல்' நாவலை தழுவி எடுக்கப்படும் இத்திரைப்படம் குறித்தான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. வெற்றி மாறன் `விடுதலை' திரைப்படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்ததால் இத்திரைப்படம் தாமதமானது. இத்திரைப்படத்திற்கான டெஸ்ட் ஷூட் ஒன்றை நடத்தி ஒரு காணொளி ஒன்றையும் படக்குழு கடந்த 2022-ம் ஆண்டு வெளியிட்டிருந்தது.

இத்திரைப்படத்திற்காக சூர்யா இரண்டு காளைகளை தனது வீட்டில் வாங்கி வளர்த்து வருகிறாராம். அதுமட்டுமல்ல, இப்படத்திற்கான சில அனிமட்ரானிக்ஸ் வேலைகளும் நடந்து வருவதாக தகவல்கள் முன்பு வெளியாகின. மாட்டுப்பொங்கலான இன்று சூர்யா, வெற்றிமாறன் உடனான ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் தாணு.

இந்தப் பதிவில் அவர், ``அகிலம் ஆராதிக்க `வாடிவாசல்' திறக்கிறது'' எனக் குறிப்பிட்டிருக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கூடிய விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. `விடுதலை' திரைப்படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன். இந்தப் படத்தில் தனுஷ் கதாநாயனாக நடிக்கவிருப்பதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியிருந்தது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/MadrasNallaMadras

Bigg Boss Tamil 8: `சேஃப் கேம் விளையாடுறது முத்துதான்'- மா.கா.பாவுக்கு பதில் சொல்லும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 8 கடைசிக் கட்டத்தை எட்டிவிட்டது.போட்டியாளர் பலரும் இறுதிக்கட்டத்தை நோக்கி பரபரப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். டாப் 6 போட்டியாளர்களுடன் எவிக்டான மற்ற போட்டியாளர்களும் விருந்தினராக பிக்... மேலும் பார்க்க

20 years of Thirupachi: ``அப்போ விஜய் சாரை எதிரியாகதான் பார்த்தேன்!'' - நினைவுகள் பகிரும் ஆர்யன்

`திருப்பாச்சி' திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது.இயக்குநர் பேரரசு இயக்குநராக அறிமுகமான திரைப்படம் `திருப்பாச்சி'தான். அவருடைய ஊர் பெயர்க் கொண்ட படங்களின் ஹிட் வரிசையும் இப்படத்திலிர... மேலும் பார்க்க

Ajith Kumar: ``நன்றிகடன் பட்டுள்ளேன்'' - அஜித் வெளியிட்ட வீடியோ!

நடிகர் அஜித்குமார் துபாயில் நடைபெற்ற மிச்சிலின் துபாய் 24H பந்தையத்தில் Ajith Kumar Racing என்ற தனது சொந்த அணியில் கலந்துகொண்டார். இந்த ஆண்டில் கார் பந்தைய சீசன் முமுழுவதும் அஜித் திரைப்படங்களில் நடிக... மேலும் பார்க்க

Tharunam: திரையிடல் நிறுத்தி வைப்பு! - மறுவெளியீடு செய்யப்போவதாக இயக்குநர் அறிவிப்பு

`முதல் நீ முடிவும் நீ' திரைப்படத்தின் மூலம் நமக்கு பரிச்சயமானவர் நடிகர் கிஷன் தாஸ்.பொங்கல் வெளியீடாக நேற்றைய தினம் ரவி மோகனின் `காதலிக்க நேரமில்லை', மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷன் முரளியின்... மேலும் பார்க்க

Bigg Boss 8: `நான் முதல் நாள்ல இருந்து சந்தேக கேஸ்ல வச்சிருக்கிற நபர் ஜாக்குலின்' - முத்துக்குமரன்

`பிக் பாஸ் சீசன் 8' இறுதி நாட்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.டாப் 6 போட்டியாளர்களுடன் வீட்டிலிருந்து எவிக்ட்டான பலரும் இப்போது விருந்தினராக வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். அத்தனை நபர்களுடனும் ... மேலும் பார்க்க

Vijay Sethupathi: `பிக் பாஸ்' ராஜு அறிமுகமாகும் படத்தில் 2 பாடல்களை எழுதியிருக்கும் விஜய் சேதுபதி

பலரின் ஃபேவரிட் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி.துணை நடிகராக சினிமாவில் அறிமுகமான இவர், தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார் .அதே சமயம் கரியர் கிராஃப் உச்சத்தை நோக்கி நகரும்... மேலும் பார்க்க