செய்திகள் :

Vetrimaaran: ``நான் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன். இப்போது..'' - வெற்றிமாறன் ஓபன் டாக்

post image
இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'.

இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றிருந்தது. இவ்விழாவில் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், மிஷ்கின், லிங்குசாமி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர். இப்படம் மது போதைக்கு அடிமையாதல் குறித்துப் பேசுகிறது. இதில் மது போதைக்கு அடிமையாதல் குறித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.

இதுகுறித்துப் பேசியிருக்கும் வெற்றிமாறன், "நான் புகைப் பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தேன். இப்போது அதை முழுமையாக விட்டுவிட்டேன். மதுபோதைப் பழக்கம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. முன்பெல்லாம் வீட்டிற்கு இருக்கும் நான்கு பேர்களில், ஒருவர்தான் குடிப்பவராக இருப்பார்.

இப்போது வீட்டில் ஒருவர் குடிப்பழக்கம் இல்லாதவர்களாக இருந்தாலே அதிசயமாக இருக்கிறது. குடிப்பழக்கம் அதிமாகியிருக்கிறது. இது பெரும் சமூகப் பிரச்னையும் கூட. இந்தப்படம் குடிபோதைக்கு அடிமையானவரின் வாழ்க்கையைப் பேசுகிறது. போதைக்கு அடிமையாகியிருப்பவர்களின் குடும்பம், அவரைச் சுற்றி இருப்பவர்கள் என்னென்ன பாதிப்பிற்கெல்லாம் உள்ளாகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசுகிறது இப்படம்.

வெற்றிமாறன்

அதிகமாக செல்போன் பார்ப்பதும், சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதும் ஒரு வித டிஜிட்டல் அடிமைத்தனம்தான். மது போதைக்கு அடிமையானவர் வழியே சமூகப் பிரச்னைகளையும் இப்படம் பேசியிருப்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது" என்று பேசியிருக்கிறார்.

Rifle Club Review: `மாஸ் - ஆக்‌ஷன் - மாஸ்' - சேட்டன்கள் கூடிய இந்த கிளப் கவனிக்க வைக்கிறதா?

திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற `ரைஃபிள் கிளப்' திரைப்படம் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.மங்களூரூவில் டானாக கொடி கட்டிப் பறக்கும் தயானந்த... மேலும் பார்க்க

Mysskin: ``இளையராஜானு ஒருத்தன் இருக்கான்...'' - இயக்குநர் மிஷ்கின் சர்ச்சைப் பேச்சு

இயக்குநர் பா.ரஞ்சித்தின் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் குரு சோமசுந்தரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாட்டல் ராதா'.இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில்நடைபெற்றிரு... மேலும் பார்க்க

இயக்குநர் ராம், மிர்ச்சி சிவா கூட்டணியில் 'பறந்து வா' - ராமுடன் கைகோர்க்கும் இசையமைப்பாளர் யார்?

இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு `பேரன்பு' திரைப்படம் வெளியாகியிருந்தது.இத்திரைப்படத்திற்குப் பிறகு, நிவில் பாலி மற்றும் சூரியை வைத்து இயக்குநர் ராம், `ஏழு கடல் ஏழு மலை' படத்தை இயக்கியிர... மேலும் பார்க்க

`46 வயது, தனிமை வாழ்க்கை, அம்மாவின் ஆசை' - நடிகை கெளசல்யாவின் பர்சனல்ஸ்

தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவைதைகளா தமிழ் சினிமாவுல கோலோச்சிய நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்க... மேலும் பார்க்க

Ajithkumar: ``அவர் இந்த விஷயத்துக்கு உதாரணம்"- அஜித் குறித்து நெகிழ்ந்த மணிகண்டன்

'குட் நைட்', 'லவ்வர்' படங்களைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் 'குடும்பஸ்தன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.இப்படத்தை நக்கலைட்ஸ் புகழ் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கிறார். இதில் குரு சோமசுந... மேலும் பார்க்க