தஞ்சாவூா் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
Viduthalai 2: `படத்தை கலை வடிவமாக பாருங்கள்!' - அர்ஜூன் சம்பத்துக்கு பதில் கொடுத்த பி.சி ஶ்ரீராம்!
வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிற `விடுதலை' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இத்திரைப்படம் தொடர்பாக இந்து மக்கள் மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத், ``நக்சல் தீவிரவாதத்தை நியாயப்படுத்தியும், பெருமைப்படுத்தியும் வெளியாகியிருக்கின்ற விடுதலை திரைப்பட குழுவினர் மீது "உபா" பாய வேண்டும். முக்கியமாக அதை வெளியிட்டிருக்கின்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மீதும். ஆயுதம் தாங்கிய பயங்கரவாதத்தை சகஜப்படுத்துகின்ற இத்திரைப்படத்தின் மீது என்.ஐ.ஏ கவனம் செலுத்த வேண்டும்.
காவல்துறையின் விசாரணை காவல் கொடுமைகளை அம்பலப்படுத்தும் மறைவில் நக்சல்வாதத்தையும் கௌரவப்படுத்துகிறார் திரைப்படத்தின் இயக்குநர். திரையரங்கை பிரசார மேடையாக மாற்றி... தமிழக இளைஞர்கள் மத்தியில் பயங்கரவாதிகளை கதாநாயகன் ஆக்குகிறார்.'' என தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அர்ஜூன் சம்பத்தின் இந்த பதிவுக்கு பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் அர்ஜூன் சம்பத்தின் இந்த பதிவை ரீ-ட்வீட் செய்து தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம்.
அவர், `` நமது கடந்த கால வரலாற்றையும், நிகழ்காலத்தின் நிதர்சன நிலையையும் எடுத்துச் சொல்லும் கிளாசிக் திரைப்படம் `விடுதலை 2'. தயவு செய்து வளர்ந்து ஒரு திரைப்படத்தை கலை வடிவமாக பாருங்கள்.'' என பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...