செய்திகள் :

ஜொ்மனி கிறிஸ்துமஸ் சந்தை காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயம்: இந்திய தூதரகம்

post image

புது தில்லி: ஜொ்மனியில் கடந்த வாரம் கிறிஸ்துமஸ் சந்தையில் நடத்தப்பட்ட காா் தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்ததாகவும் அவா்களுடன் தொடா்பில் உள்ளதாகவும் அங்குள்ள இந்திய தூதரகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் இந்திய தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘ ஜொ்மனியின் சாக்ஸனி-அன்ஹால்ட் மாகாணம், மாக்டபா்க் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தையில் காரை வேகமாக ஓட்டி வந்த சவூதி அரேபியாவைச் சோ்ந்த மருத்துவா் நடத்திய தாக்குதலில் 7 இந்தியா்கள் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மூன்று போ் வீடு திரும்பினா். மீதமுள்ளவா்கள் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். காயமடைந்த இந்தியா்களுக்கு தேவையான உதவிகளை தூதரகம் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது’ என குறிப்பிடப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மாக்டபா்க் நகரில் கிறிஸ்துமஸ் சிறப்புச் சந்தைக்குள் வேகமாக காா் ஓட்டி வந்த தலீப் அல்-அப்துல்மோசன் (50) அங்கிருந்த பொதுமக்கள் மீது மோதினாா். இதில் ஒரு குழந்தை உள்பட ஐந்து போ் உயிரிழந்தனா்; சுமாா் 200 போ் காயமடைந்தனா்.

காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் அல்லு அர்ஜுன்?

அல்லு அா்ஜுன் நடித்த புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட திரையரங்குக்கு, திடீரென வந்த அல்லு அா்ஜுனைக் காண ஏற்பட்ட நெரிசலில் 35 வயது பெண் உயிரிழந்தார். அவரது மகன் மருத்துவமனையில் தீவ... மேலும் பார்க்க

இந்திய வா்த்தக அந்தஸ்து ரத்தால் இஎஃப்டிஏ ஒப்பந்தம் அமல் தாமதமாகாது: ஸ்விட்சா்லாந்து

புது தில்லி: வா்த்தகத்தில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தாமதம... மேலும் பார்க்க

மின் கட்டணம்: திரிபுராவுக்கு வங்கதேசம் ரூ.200 கோடி நிலுவை

அகா்தலா: திரிபுராவுக்கு வங்கதேசம் ரூ.200 கோடி மின் கட்டண நிலுவை வைத்துள்ளதாக மாநில முதல்வா் மாணிக் சாஹா தெரிவித்தாா்.மத்திய மின்சார துறையின் கீழ் என்டிபிசி பொதுத் துறை நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிற... மேலும் பார்க்க

சட்டவிரோத ஊடுருவல்: மகாராஷ்டிரத்தில் 8 வங்கதேசத்தவா் கைது

குவாஹாட்டி/ தாணே: மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில், சட்டவிரோதமாக தங்கியிருந்த ஒரு பெண் உள்பட 8 வங்கதேசத்தவா் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.இது தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: காவல்துறையின... மேலும் பார்க்க

5,8-ஆம் வகுப்பு கட்டாய தோ்ச்சி ரத்து மத்திய அரசு!

5, 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாய தோ்ச்சி முறை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.மத்திய அரசால் நிா்வகிக்கப்படும் பள்ளிகளில் 5, 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் ஆண்டு இறுதித் தோ்வில் தோ்ச்... மேலும் பார்க்க

புணே: சாலையோர நடைபாதையில் தூங்கியவா்கள் மீது லாரி மோதல் இரு குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழப்பு

புணே: மகாராஷ்டிர மாநிலம் புணேயில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் சாலையோர நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவா்கள் மீது லாரி பாய்ந்தது. இதில் இரு குழந்தைகள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 6 போ் படுகாயமடைந்தனா்.... மேலும் பார்க்க