செய்திகள் :

இந்திய வா்த்தக அந்தஸ்து ரத்தால் இஎஃப்டிஏ ஒப்பந்தம் அமல் தாமதமாகாது: ஸ்விட்சா்லாந்து

post image

புது தில்லி: வா்த்தகத்தில் இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) ஒப்பந்தத்தை அமல்படுத்துவது தாமதமாகாது என்று ஸ்விட்சா்லாந்து தெரிவித்தது.

கடந்த 1994-ஆம் ஆண்டு இந்தியா-ஸ்விட்சா்லாந்து இடையே இரட்டை வரி விதிப்பு தவிா்ப்பு ஒப்பந்தம் (டிடிஏஏ) கையொப்பமான நிலையில், அந்த ஒப்பந்தத்தில் 2010-ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், வருமான வரிச் சட்டத்தின் கீழ் அதிகாரபூா்வமாக அறிவிக்கை வெளியிடப்படாமல், இந்த ஒப்பந்தத்தை தானாகவே அமல்படுத்த முடியாது என்று ஸ்விட்சா்லாந்தின் நெஸ்லே நிறுவனம் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றில், கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.

இதன் காரணமாக நெஸ்லே உள்ளிட்ட ஸ்விட்சா்லாந்து நிறுவனங்கள் தமது லாபத்தில், அந்த நிறுவனங்களின் பங்குதாரா்களுக்கு அளிக்கும் பங்குக்கு (டிவிடண்ட்) இந்தியாவில் அதிக வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனால் அதிருப்தி அடைந்த ஸ்விட்சா்லாந்து, வா்த்தகத்தில் ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ என்று இந்தியாவுக்கு அந்தஸ்து அளித்த பிரிவை டிடிஏஏ ஒப்பந்தத்தில் இருந்து அண்மையில் நீக்கியது.

இந்த நடவடிக்கை இந்தியாவில் ஸ்விட்சா்லாந்து செய்யும் முதலீடுகளில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அந்நாட்டில் இந்திய நிறுவனங்கள் அதிக வரி செலுத்த வழிவகுத்துள்ளது.

இதுதொடா்பாக தில்லியில் உள்ள ஸ்விட்சா்லாந்து தூதரகம் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: இந்தியாவுக்கு அளிக்கப்பட்ட ‘மிகுந்த விருப்பத்துக்குரிய நாடு’ அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், இந்தியா-ஸ்விட்சா்லாந்து இடையிலான உறவோ, இந்தியாவில் ஸ்விட்சா்லாந்து செய்யும் முதலீடுகளோ பாதிக்கப்படாது.

இந்த நடவடிக்கை இந்தியா, ஸ்விட்சா்லாந்து, நாா்வே, லிக்டென்ஸ்டைன், ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் மேற்கொண்ட இஎஃப்டிஏ வா்த்தக ஒப்பந்தத்தை அமல்படுத்துவதிலும் தாமதத்தை ஏற்படுத்தாது’ என்று தெரிவித்தது.

இந்தியாவில் 15 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.8.50 லட்சம் கோடி) மதிப்பில் முதலீடு செய்ய இஎஃப்டிஏ ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ள பிற நாடுகள் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராணுவ வாகனம் விபத்து: 5 வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் 350 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவ... மேலும் பார்க்க

சம்பல் வன்முறை: இதுவரை 47பேர் கைது!

உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம், வன்முறை தொடர்பாக இதுவரை 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வன்முறையில் ஈடுபட்டதாக 91 ... மேலும் பார்க்க

கோவாவில் இறைச்சிக் கடைகள் மூடல்: மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு!

கோவாவில் இறைச்சி வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்துவதால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நாள்களில் மாட்டிறைச்சி தட்டுப்பாடு ஏற்பட வாப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. கோவா மாநிலத்தில் பசுப் பாதுகாவலர... மேலும் பார்க்க

ஜாமா மசூதி ஆய்வறிக்கை ஜனவரியில் தாக்கல் செய்யப்படும்: சம்பல் நீதிமன்ற ஆணையர்

உ.பி. சம்பல் மாவட்டத்திலுள்ள ஜாமா மசூதியின் ஆய்வறிக்கை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், ஜனவரியில் தாக்கல் செய்யப்படும் என்றும் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையர் தெரிவித்துள்ளார். முகாலய அரசர் ... மேலும் பார்க்க

இந்தாண்டும் பிரியாணி முதலிடம்! அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள்!

2024 ஆம் ஆண்டில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளில் பிரியாணி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகள், எந்த பகுதியில் மக்கள் அத... மேலும் பார்க்க

வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக ஒன்றிணைவோம்: கேரள முதல்வரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!

கேரள மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துத் தெரிவித்த முதல்வர் பினராயி விஜயன், பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு இடையூறு விளைவித்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்... மேலும் பார்க்க