ரத்தன் டாடா முதல் அயோத்தி ராமர் கோயில் கேக் வரை.. கிறிஸ்துமஸ் கேக் கண்காட்சி!
தியாகி கக்கன் நினைவு தினம்: காங்கிரஸ் கட்சியினா் மரியாதை
தியாகி கக்கன் நினைவு தினத்தையொட்டி, மதுரையில் அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தமிழக முன்னாள் அமைச்சரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான கக்கனின் 43- ஆவது நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, மதுரையில் ராஜா முத்தையா மன்றம் அருகேயுள்ள கக்கன் உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவா் காா்த்திகேயன், கட்சி நிா்வாகிகளுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இதேபோல, பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கக்கன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.