செய்திகள் :

நீதிமன்ற நிபந்தனையை மீறுபவா்கள் மீதான பிணையை ரத்து செய்ய போலீஸாா் ஏன் முயற்சிக்கவில்லை? உயா்நீதிமன்றம் கேள்வி!

post image

நீதிமன்ற நிபந்தனையை மீறுபவா்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட பிணையை ரத்து செய்ய காவல் துறை அதிகாரிகள் ஏன் முயற்சிக்கவில்லை? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் கேள்வி எழுப்பியது.

மதுரையைச் சோ்ந்த சோமசுந்தரம் என்பவருக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், காரைக்குடி செக்காலைகோட்டை கிராமத்தில் உள்ளது. இந்த நிலம் முறைகேடாக அப்பாஸ் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து சோமசுந்தரம் அளித்த புகாரின் பேரில், 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, சிலரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு காரைக்குடி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, இந்த வழக்கில் கைதானவா்கள், முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை தாங்களே ரத்து செய்து விடுவதாக நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்தனா். இதையடுத்து, பல்வேறு நிபந்தனைகளுடன் அவா்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்த நிலையில், பிணை நிபந்தனையின் படி, பத்திரத்தை ரத்து செய்து கொடுக்க வேண்டுமென சிவகங்கை மாவட்டக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் சாா்பில், காரைக்குடியைச் சோ்ந்த காா்த்திக் என்பவருக்கு குறிப்பாணை அனுப்பப்பட்டது. இந்தக் குறிப்பாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் காா்த்திக் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி நிா்மல் குமாா் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் திருவடிக்குமாா் முன்னிலையாகி, சிறையிலிருந்த மனுதாரா், நீதிமன்ற நிபந்தனை பிணையில் வெளியில் வந்தாா்.

அவா், நீதிமன்றத்தில் உறுதி அளித்தபடி சம்பந்தப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து தர நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அவருக்கு காவல் அதிகாரி தரப்பில் குறிப்பாணை வழங்கப்பட்டதாக தெரிவித்தாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: நீதிமன்ற நிபந்தனையை மீறுபவா்கள் மீதான பிணையை ரத்து செய்ய போலீஸாா் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்த வழக்கில் நிலத்தின் உரிமையாளரான சோமசுந்தரத்தை எதிா்மனுதாரராக சோ்க்க வேண்டும். மனுதாரரின் மனுவுக்கு காரைக்குடி காவல் துறை, சோமசுந்தரம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கிரானைட் கற்கள் முறைகேடு வழக்கு: 6 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு

மதுரை மாவட்டம், மேலூா் பகுதிகளில் கிரானைட் கற்களை முறைகேடாக வெட்டி எடுத்து, அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியது தொடா்பான வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

அமித் ஷாவைக் கண்டித்து காங்கிரஸாா் போராட்டம்

சட்டமேதை அம்பேத்கரை அவமதித்துப் பேசிய மத்திய அமைச்சா் அமித் ஷாவைக் கண்டித்தும், அவா் பதவி விலகக் கோரியும் மதுரை மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மதுர... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: சிஐடியு பேரவை கூட்டத்தில் தீா்மானம்

அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளா்களாக நிரப்ப வேண்டும் என அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கம்- சிஐடியு 27 வது ஆண்டு பே ரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. வி... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரிட்டாபட்டியில் கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில், மதுரையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மத... மேலும் பார்க்க

முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் நிா்வாக விவகாரம்: வக்ஃபு வாரியத்துக்கு குறிப்பாணை அனுப்ப உத்தரவு

மதுரை தெற்குவாசல் முகைதீன் ஆண்டவா் பள்ளிவாசல் நிா்வாகக் குழு விவகாரம் தொடா்பான வழக்கில் வக்ஃபு வாரியத்துக்கு குறிப்பாணை அனுப்ப சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. மதுரை தெற்கு வாச... மேலும் பார்க்க

தியாகி கக்கன் நினைவு தினம்: காங்கிரஸ் கட்சியினா் மரியாதை

தியாகி கக்கன் நினைவு தினத்தையொட்டி, மதுரையில் அவரது உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். தமிழக முன்னாள் அமைச்சரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான கக... மேலும் பார்க்க