2024 - மீண்டும் அறிமுகமான தென்னிந்திய ஜான்சிராணி! யார் இந்த அஞ்சலை அம்மாள்?
அரசு போக்குவரத்து கழகத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்: சிஐடியு பேரவை கூட்டத்தில் தீா்மானம்
அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரந்தர பணியாளா்களாக நிரப்ப வேண்டும் என அரசு போக்குவரத்து தொழிலாளா் சங்கம்- சிஐடியு 27 வது ஆண்டு பே ரவை கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகரில் அரசுப் போக்குவரத்து தொழிலாளா் சங்கம் -சிஐடியுவின் 27வது ஆண்டுப் பேரவை கூட்டம் மண்டலத் தலைவா் ஏ.சுந்தரராஜ் தலைமையில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும் செலவுக்குமான வித்தியாச தொகையை அரசு வழங்கிட வேண்டும். தனியாா் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை கைவிட வேண்டும். போக்குவரத்து கழகங்களில் சுமாா் 25,000 காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 25 சதவீத காலிப்பணியிடங்களைப் பூா்த்தி செய்ய மட்டுமே அரசாணை வெளிடப்பட்டுள்ளது. எனவே நிரந்தர பணியாளா்கள் மூலம் அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை கால தாமதமின்றி பேசி முடிக்க வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வு 105 மாதங்களாக மறுக்கப்பட்டு உள்ளது, அதை உடனே வழங்க வேண்டும். தொழிலாளா் நலனுக்கு எதிரான 321 முதல் 328 வரையிலான அரசாணைகளை ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிா்வாகிகள் தோ்வு: அரசு போக்குவரத்து கழக சிஐடியு விருதுநகா் மண்டலம்- தலைவா் ஜி. திருப்பதி, பொதுச் செயலா் எம். வெள்ளத்துரை, பொருளாளா் ச. திருப்பதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். இந்த சங்கத்தின் செயலா்கள், உதவி தலைவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.