Ooty: இயற்கை உபாதை கழிக்க ஒதுங்கிய இளைஞர்; தலை குதறப்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந...
Viduthalai வாத்தியார் கலியப்பெருமாள் Real Story - Senior Journalist Manaa Interview
1960-களில் பள்ளி தமிழாசிரியராகப் பணியாற்றியவர் புலவர் கலியபெருமாள். ஆசிரியர் பணியை உதறிவிட்டு சாதி ஒழிப்புக்காக, வர்க்க விடுதலைக்காக, பண்ணையடிமைத்தனத்துக்கு எதிராக ஆயுதமேந்தி போராடினார். ஆரம்பத்தில் சி.பி.எம்-மில் இணைந்து செயல்பட்டு, பிறகு நக்சலைட்டாக மாறினார். வெடிவிபத்து வழக்கில் இவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டு, பிறகு அது ஆயுள்தண்டனையாக குறைக்கப்பட்டது. இவரது வாழ்க்கைதான் விடுதலை 2 படத்தில் பெருமாள் வாத்தியார் என்ற விஜய்சேதுபதியின் பாத்திரம் என்று சொல்லப்படுகிறது. ஆயுள்தண்டனை முடிந்து விடுதலையான பிறகு தன் கடைசி காலத்தில், சொந்த ஊரான பெண்ணாடத்தில் அவர் காய்கறி கடை நடத்தினார். அப்போது அவரை பத்திரிகையாளர் மணா பேட்டி எடுத்திருக்கிறார்.