செய்திகள் :

Vijay : 'வண்டி வண்டியா கொள்ளையடிச்ச பணம் அது; அடுத்த வருஷம்..!' - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

post image

'விஜய் கல்வி விருது வழங்கும் விழா!'

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கும் விழாவை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் நடக்கும் விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வில் மாணவர்களின் மத்தியில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விஜய் பேசியிருந்தார்.

விஜய்
விஜய்

'நீட் மட்டும்தான் உலகமா!'

விஜய் பேசியதாவது, 'இளம் தலைவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்க எல்லாரையும் சந்தித்ததில் பெரிய மகிழ்ச்சி. உங்கள் எல்லாருக்கும் முதலில் வாழ்த்துகள். படிப்புல சாதிக்கணும்தான். அதுக்குன்னு ஒரே ஒரு படிப்புல மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிச்சு அதுல மட்டும் சாதிக்கணும்னு அழுத்தம் ஏத்திக்க தேவை இல்லை. நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கு.

ஜனநாயகவாதியா இருங்க. ஜனநாயகவாதியா இருந்தாதான் சுதந்திரமா இருக்க முடியும். உங்க வீட்ல இருக்க எல்லார்க்கிட்டயும் அவங்க ஜனநாயகக் கடமையை சரியா செய்ய சொல்லுங்க. அது ரொம்ப எளிமையான விஷயம்தான். இதுவரைக்கும் ஊழல் பண்ணாத நல்லவங்கள நம்பிக்கையானவங்களை தேர்வு செய்ய சொல்லுங்க.

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இதே நிகழ்வுல, ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது, அந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்காதீங்கன்னு சொல்லிருந்தேன். அதை அப்படியே பின்பற்றுங்க. ஆனா, நீங்களே பாருங்க அடுத்த வருசம் வண்டி வண்டியா பணத்தை கொண்டு வந்து கொட்ட போறாங்க. அது எல்லாமே உங்கக்கிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம் அது. என்ன பண்ணணும்னு உங்களுக்கு சரியா தெரியும்.

உங்க குழந்தைகள் மேல எந்த அழுத்தத்தையும் போடாதீங்க. அவங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சு வழிநடத்துங்க. சாதி மதத்தை வைத்து பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கம் போய் விடாதீர்கள். விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்தா விதைக்கிறாங்க? இயற்கையோட வெயில் மழைல சாதி இருக்கா?” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

`11 வருடத்திற்குப் பிறகு' - அண்ணனைக் காண வந்த முதல்வர்; காத்திருந்த அண்ணி - நெகிழ்ந்த குடும்பம்

முதல்வர் ஸ்டாலின் அழகிரி சந்தித்துப்முதல்வர் ஸ்டாலின் அழகிரி சந்தித்துப்முதல்வர் ஸ்டாலின் அழகிரி சந்தித்துப்முதல்வர் ஸ்டாலின் அழகிரி சந்தித்துப்முதல்வர் ஸ்டாலின் அழகிரி சந்தித்துப்முதல்வர் ஸ்டாலின் அழ... மேலும் பார்க்க

MK Stalin Speech: `அடுத்த ஆண்டு இதே நாள்; தலைப்புச்செய்தி இப்படி இருக்க வேண்டும்'- முதல்வர் ஸ்டாலின்

"கழகம் இதுவரைக்கும் அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் நீங்கள்தான் காரணம். உடன்பிறப்புகளான நீங்கள் இல்லாமல் கழகமும் இல்லை, நானும் இல்லை.." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் ப... மேலும் பார்க்க

திமுக வரலாற்றில் அரை நூற்றாண்டிற்குப் பிறகு மதுரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொ... மேலும் பார்க்க

`3 அடி இலையில் 13 வகை அசைவ உணவு' - திமுக பொதுக்குழு கூட்டத்தின் விருந்து | Photo Album

பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொதுக்குழு கூட்டம்பொ... மேலும் பார்க்க

ஆதவ் அர்ஜூனா பேசியது தொடர்பாக விஜய் பேசினாரா? - எடப்பாடி பழனிசாமி விளக்கம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பொதுக்குழுவில் அதிமுக குறித்து தீர்மானம் நிறைவேற்... மேலும் பார்க்க