செய்திகள் :

Vijay Sethupathi : ``பான் கார்டு வலைதளப்பக்கத்தில் தமிழ் சேர்க்க வேண்டும்" - விஜய் சேதுபதி கோரிக்கை

post image
பான் கார்டு விண்ணப்பிக்கும் வலைதளப்பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் இருப்பது நிறைய பேருக்கு கடினமாக இருப்பதாகவும், தமிழும் அதில் சேர்க்க வேண்டும் என்றும் நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

மதுரையில் வருமான வரித்துறை சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, ``அரசிடமிருந்து எதாவது தகவலைத் தெரிந்துகொள்ள யாரைப் பார்க்க வேண்டும் என்பது முன்னாடி பெரிய கஷ்டமாக இருக்கும். இப்போது, அதை நாம் எளிமையாக தெரிந்துகொள்ளும் அளவுக்கு, எல்லோரும் புரிந்துகொள்ளும் அளவுக்கு வெப்சைட் ஆரம்பித்து, பான் கார்டு (PAN Card) எப்படி அப்ளை செய்வது, அதில் இருக்கும் சிக்கல் என்ன, குழந்தைகளுக்குப் புரிகின்ற மாதிரி கார்ட்டூன் வடிவில் கொடுத்திருப்பது நல்ல முன்னெடுப்பு.

vijay sethupathi

ஆனால், பான் கார்டு அப்ளை செய்யவேண்டுமென்றால், அது ஆங்கிலத்திலும், இந்தியிலும்தான் இருக்கிறது. அது இங்க நிறைய பேருக்கு கடினமாக இருக்கும். தமிழிலும் இருந்தால், புரிந்துகொள்வதற்கு வசதியாக இருக்கும். ஏனென்றால், இங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறது, எப்படி இருக்கிறது என்பதை திடீர்னு ஒரு பிரச்னை வரும்போதுதான் தெரிஞ்சிக்றோம். அதைப் பற்றிய விளக்கமும், தெளிவும் நமக்கு புரிகின்ற மொழியில் இருந்தால் நாம் அதில் இன்னும் தெளிவாக இருக்க முடியும் என்று நினைக்கிறன்.

இல்லையென்றால், மறுபடியும் அதைப் பற்றி ஒருவரைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்கும். எனவே, அது நிகழ்ந்தால் நன்றாக இருக்கும். மாற்றபடி இந்த முயற்சி அற்புதமானது. வரி செலுத்துவது மிக முக்கியம். எவ்வளவுக்கு எவ்வளவு நம்முடைய உரிமைக்காக அரசிடம் கோரிக்கை வைக்கின்றோமோ, அதே அளவு வரிசெலுத்துவதும் நம்முடைய கடமை.

விஜய் சேதுபதி

ரொம்ப நாளாக மனதில் இருக்கின்ற ஒரு விஷயம், கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி கட்டுகிறோம், எதாவது பெனிஃபிட் இருந்தால் நல்லா இருக்கும். இவ்வளவுக்கு மேல் இருந்தால் வரி என்று பிரிவு வைத்திருக்கிறீர்கள். அது மாதிரி, ஒரு காலத்துல நன்றாக சம்பாதித்து, ஒரு கட்டத்தில் வருமானம் இல்லாமல் நிலைமை சரியில்லாமல் போனால், அவர் நல்ல குடிமனாக வரி கட்டியிருந்தால் அவருக்கென்று எதாவது பெனிஃபிட் இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதையும் கொஞ்சம் கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடினம்?

இந்திய சினிமாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் அமெரிக்க சினிமாட்டோகிராப்பர் சொசைட்டி (ASC) என்ற உலகப் புகழ்பெற்ற சங்கத்தின் உறுப்பினராக இணைந்துள்ளார். இந்த நிகழ்வைத் தற்போது அவர் பணியாற்றிவரும் லவ... மேலும் பார்க்க

``சந்தானம் அதைச் சொன்னப்போ அழுதுட்டேன்"- நெகிழும் `லொள்ளு சபா' சாமிநாதன்

நடிகர் லொள்ளு சபா சாமிநாதன் மகள் ஐஸ்வர்யா திருமணம் கும்பகோணத்தில் நடந்து முடிந்திருக்கிறது. நடிகர்கள் வையாபுரி, காளி வெங்கட் உள்ளிட்ட சிலர் அதில் கலந்து கொண்டனர்.'சிம்பிளா முடிச்சிட்டீங்களே, சினிமா நண... மேலும் பார்க்க

Karathey Babu: "மாண்புமிகு மகா ஜனங்களே..." - BTS புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு | Photo Album

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpXசினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொ... மேலும் பார்க்க

``ஒவ்வொரு முறையும் அடிகளும், வலிகளும்தான்; பிரச்னை வந்துகிட்டே இருக்கு..'' -வருந்தும் சமுத்திரக்கனி

இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் 'திரு.மாணிக்கம்'. இப்ப... மேலும் பார்க்க

Parasakthi: ``பழைய பெயர் வைப்பது தவறு; `பராசக்தி’ என்றால் கலைஞர்; அதற்கு மேல்..." – பார்த்திபன்

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்தன்னுடைய படப்பிடிப்பு தொடர்பாக இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் நேற்று புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனைச் சந்தித்தார். அதன்பி... மேலும் பார்க்க