செய்திகள் :

Vikatan Play Contest : இது ரோலர் கோஸ்டர் பயணம்! | கோட்டைப்புரத்து வீடு

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

கோட்டைப்புரத்து வீடு : இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் எழுத்தில், ஆனந்த விகடனில் தொடர் கதையாக வந்து பிறகு சன் டிவியில் மர்மதொடராக திரைவடிவம் கண்டு இப்போது விகடன்பிளே யில் கேட்கும் போது, நம்மை மீண்டும் 90-களின் நாட்களுக்கு இழுத்துச் செல்லும் அற்புதக் கலை வடிவம்.

ஆங்கிலேய ஆட்சி காலத்தில் , நிர்வாக வசதிக்காக சமஸ்தானங்களாக பிரிக்கப்பட்ட நிலத்தை நிர்வகித்தவர்கள் தம்மை கடவுளாகவே எண்ணி கொண்டு, தங்கள் குடிகளின் விசுவாசத்தை தம் சுயநலத்திற்கும், பாலியல் தேவைகளை தீர்க்கும் கருவியாகவும் எண்ணிக் காலின் கீழிட்டு நசுக்கிய நாட்களை நம் கண் முன் கொணர்ந்த விதம் எல்லாம் கிளாசிக் ரகம்.

Vikatan Play

ரூப சேகர கோட்டைபுரத்தார் ராஜாக்கள், வஞ்சியம்மா, ராணி ரத்னாவதி, நண்டு வடாகன், வீரநாட்டார், தேவர், விஷ்ணு சித்தன், திவ்ய மங்களம், பாண்டியம்மாள், வஞ்சியம்மா, அவளது சாபம் , நண்டு வடாகன் , நூறு குடி கூட்டம், வேங்கை பொன்னி, கார்வார் கருணாகர மூர்த்தி என பாத்திர படைப்புகளை அர்ச்சனா என்னும் நூலில் தொடுத்து பின்னனப்பட்ட கதம்ப மாலை இந்த கோட்டைப்புரத்து வீடு.

இதில் சொல்லப்பட்ட சம்பவங்கள் கற்பனையே என்று நம் மனதை நம்ப வைப்பது மிகவும் கடினமாகவே அமைகிறது. அத்தனை ஆழமும், செறிவும் கொண்ட வார்த்தை பிரயோகங்கள் நம்மை அந்த கால கட்டத்துக்கே இழுத்து செல்ல எத்தனிக்கும் அற்புதம் இந்த கோட்டைப்புரத்து வீடு.

வளையாம்பிகையின் சிசு மரணிக்கயில், நம்மையும் அறியாமல் கண்கள் கசியும்... வேங்கை பொன்னியின் ஆலயத்தில் வஞ்சியம்மா புலி வாய் அகப்பட்ட மானாய்த் தவிக்கையில் , நம்மையும் பதை பதைக்க வைக்கும் உயிரோட்டம் கொண்டது இந்த கோட்டைப்புரத்து வீடு..

விசுவும் அர்ச்சனாவும் சேர்ந்து விட வேண்டுமே என்ற தவிப்பை , இந்தப் புதினத்தைப் படிக்கும் ஒவ்வொருவரின் மனத்தினுள்ளும் ஆழமாய் பதிய வைத்த ஆசியரின் திறமைக்கு "ஒரு சோறு பதம் " தவிர வேறென்ன உவமை சொல்ல முடியும்?

விஷ்ணு சித்தன் வழியாக உண்மையை அர்ச்சனா அறியும் கட்டத்தில் , நம் மனமும் ரூப சேகர கோட்டைபுறத்தார் ராஜாக்களின் அகால மரண சாபத்துக்கு நியாயம் கற்பிக்கத் துவங்குவது நவீன வகை ஹிப்னாடிசம் அன்றி வேறென்ன??

கோட்டைப்புரத்து வீடு

பெண்களை போகப் பொருளாகவே எண்ணி தம் ஆணாதிக்க வெறியில், ஆணவத்தின் பிடியில் , மிருக இச்சையின் உச்சத்தில் நடத்தப்படும் " ராஜ பிரசாதம் " என்னும் அருவருக்கத் தக்க சடங்கின் அரங்கேற்றம் , இதே வகையிலான நிஜங்களின் நிதரிசனத்தை நம் கண் முன் உலவ விடுகிறது . பல நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட இந்த வக்கிரத்தின் தண்டனையாகவே இந்தக் கதையின் முடிவையும் அமைத்திருப்பது சிறப்பு .

கதையின் கடைசி வரி வரைக்கும் மர்மத்தை நீட்டித்து , இவர் தான் நடந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் சூத்திரதாரி என்று மர்ம முடிச்சு அவிழும் கட்டம் " அடடே" சொல்ல வைக்கும் ..

ஒரு திகில் கதையின் இலக்கணங்கள் எதையும் மீறாமல் , எந்த எல்லைக்குள்ளும் சிக்காமல் கடந்த காலத்துக்குள்ளும் நிகழ் காலத்துக்குள்ளும் எவ்வித குழப்பமும் இன்றி மாறி மாறி பயணித்து இறுதியில் காரணமின்றி காரியங்கள் இல்லை என உணரவைக்கும் ரோலர் கோஸ்டர் பயணம் இந்தப் புதினம் ..

'எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது ..பேசினா புரிஞ்சிக்குவேன் " என்று பெருமை (?) பேசித் திரியும் நமது ஈராயிரக் குளவிகள் (நம்ம 2k கிட்ஸ் தாங்க) இது போன்ற மர்ம கதைகளைப் படித்து சுவைக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்களே என்று ஆதங்கப்படும் என்னைப் போன்ற 90 களின் குழந்தைகளுக்கு (ரொம்ப திட்டாதீங்க..இப்போ சொல்லறது நம்ம 90ஸ் கிட்ஸ் பத்தி தாங்க.. ) விகடனின் " விகடன் ப்ளே " நிஜமாகவே ஒரு வரப்பிரசாதம் தான் ..

கோட்டைப்புரத்து வீடு... அன்றும் , இன்றும் என்றும் மிரட்டும் திகில் திருவிழா ..

-செல்வ கிருத்திகா கௌரிநாதன்

கலிபோர்னியா

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் அறிவு வளாகம் - வாசகர்கள் நன்கொடை அளிக்கலாம்

காரைக்குடி அருகேயுள்ள கோட்டையூரைச் சேர்ந்தவர் முத்தையா. 'ரோஜா ஆர்ட்ஸ்' என்ற பெயரில் விளம்பரப் பலகை எழுதும் ஓவியர். அந்த ரோஜா முத்தையாவின் பெயருக்குப் பின்னால் ஒட்டிக்கொள்ள, 'ரோஜா முத்தையா' ஆனார். எல்ல... மேலும் பார்க்க

``மக்களுக்காக மேடையேறும் கலைஞர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும்'' - நெகிழ வைத்த திணை நிலவாசிகள்

கலைஞர்களுக்கான உரிய மரியாதையை செலுத்துவது அவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும். இதன் பிறகும் கலையை நமக்கு மரியாதை செய்வோர் முன்னெடுத்துச் செல்வார்கள் என்ற நம்பிக்கை பிறக்கும். இப்படியான ஒரு விஷயத்தை நிகழ... மேலும் பார்க்க

முத்து காமிக்ஸ்: "சினிமாவில் விருது வாங்கும்போது கூட கிடைக்காத சந்தோஷம் அது" - நெகிழும் பொன்வண்ணன்

கதை சொல்லலில் எத்தனையோ நவீன கலை வடிவங்கள் வந்தாலும் சுவாரஸ்யமும் கற்பனையும் சித்திரமும் செழித்துக்கிடக்கும் ஒரு கலைவடிவம் காமிக்ஸ்.தமிழில் காமிக்ஸ்களை அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒருவரான முத்து காமிக... மேலும் பார்க்க

என் கேள்விக்கென்ன பதில்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

எட்யுரைட் அறக்கட்டளை, AI சிங்கப்பூர் இணைந்து, தமிழ்மொழி - பெரு மொழிப் போன்மம் உருவாக்க உடன்படிக்கை!

எட்யுரைட் அறக்கட்டளையானது (EduRight Foundation) AI சிங்கப்பூர் (AISG)உடன் இணைந்து தமிழ்மொழி - பெரு மொழிப் போன்மம் (LLM - Large language model) உருவாக்குவதற்கான உடன்படிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம... மேலும் பார்க்க