இந்தியாவின் நதி நீர் இனி நமது நாட்டுக்காக பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி
Virat Kohli: `என் மகனை உருவாக்கியது அவர் தான்’ - யஷ் தயாளின் தந்தை நெகிழ்ச்சி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் த்ரில்லான வெற்றியைப் பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை எட்டியது.
அந்த போட்டியில் கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. தோனி, ஜடேஜா என இரண்டு சிறந்த ஃபினிஷர்கள் களத்தில் நின்றனர். முதல் பந்தில் தோனி விக்கெட் ஆன பிறகு சிவம் தூபே களத்துக்கு வந்தார்.
சென்னை அணியின் அதிரடி வீரர்களைக் களத்தில் நிறுத்தி, ஒரு நோபால் சிக்சர் கொடுத்தும் 15 ரன்களை டிஃபண்ட் செய்து ஆர்.சி.பியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார் யஷ் தயாள்.

இந்த போட்டிக்குப் பிறகு யஷ் தயாளின் தந்தை சந்தர்பால், RCB -ல் இணைந்த நாள் முதலே விராட் கோலி தனது மகனுக்கு எப்படி உறுதுணையாக இருந்தார் என்பது பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.
யஷ் தயாள் 2023ம் ஆண்டு குஜராத் அணிக்காக விளையாடுகையில், ஒரே ஓவரில் ரிங்கு சிங்குக்கு 5 சிக்சர்கள் விட்டுக்கொடுத்ததன் மூலம் நெகடிவ் லைட்டுக்கு வந்தவர்.
2024ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இணைந்து, அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக உருவாகியுள்ளார் 27 வயது யஷ்.

சந்திரபால் தயாள் கூறுகையில், "விராட் கோலி அவருக்கு தொடர்ந்து ஆதரவளித்தார். ஆர்.சி.பியில் இணைந்தபிறகு அவருக்கு(யஷ்) ஊக்கமாக இருந்தார். சில நேரங்களில் யஷ்ஷை அவரது அறைக்கு அழைப்பார், சில நேரங்களில் விராட் கோலியே யஷ்ஷின் அறைக்கு செல்வார்." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் விராட் யஷ் தயாளுக்கு வழங்கிய அறிவுரையையும் பகிர்ந்தார், "விராட் கோலி, யஷ் தயாள்க்கு, 'கடினமாக உழைக்க வேண்டும். புயலே வந்தாலும் நான் உன்னுடன் இருக்கிறேன். எதற்கும் கவலைப்படாதே, கடினமாக உழைப்பதை மட்டும் விட்டுவிடாதே. தவறுகள் செய்யலாம், ஆனால் அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.' என அறிவுரை வழங்கினார்.
விராட்தான் யஷ் தாயாள்க்கு அதிகப்படியான சுதந்திரம் வழங்கி அவரை பயமறியாத கிரிக்கெட்டராக உருவாக்கியிருக்கிறார்." என்று பேசியுள்ளார் சந்திரபால் தயாள்.