செய்திகள் :

Warren Buffett: தொடரும் நன்கொடை... இந்த முறை 1.2 பில்லியன் டாலரை அள்ளிக்கொடுத்த வாரன் பஃபெட்!

post image

அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ஹாத்வே நிறுவனத் தலைவரும், உலகின் பணக்காரர்களில் ஒருவருமான வாரன் பஃபட் தன் சொத்துகளில் 1.2 பில்லியன் டாலர் சொத்துகளை தன் அறக்கட்டளைக்கு வழங்கியிருக்கிறார். வாழ்நாளுக்குள்ளும், வாழ்நாளுக்குப் பிறகும் 150 பில்லியன் டாலரை நன்கொடை வழங்க வேண்டும் என 2006-ம் ஆண்டு வாரன்ட் பஃபட் உறுதிமொழி எடுத்திருந்தார்.

வாரன் பஃபெட்

அதை நிறைவேற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு தொகையை நன்கொடையாக கொடுத்து வருகிறார். இதற்கு முன்னர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் தன் மனைவி மெலிண்டா உடன் இணைந்து பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, தன்னிடம் உள்ள சொத்துகளில் இருந்து பெரும் பகுதியைத் நன்கொடையாக அந்த அறக்கட்டளைக்கு அளித்துள்ளார்.

அந்த அறக்கட்டளையின் மூலம் கல்வி, மருத்துவம் மற்றும் ஏழ்மை ஒழிப்பு உட்பட பல்வேறு உதவிகளை உலகில் உள்ள பல பகுதிகளுக்கு வழங்கி வருகிறார்.

வாரன் பஃபெட்க்கு ஹோவர்ட், சூசன் மற்றும் பீட்டர் என்று மூன்று வாரிசுகள் உள்ளனர். அந்த மூன்று வாரிசுகளும் தங்களது தலைமையில் அறக்கட்டளைகளை நிறுவி அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.

இத்துடன் வாரன் பஃபெட்டும் மறைந்த மனைவி சூசன் தாம்சன் பெயரிலும் ஓர் அறக்கட்டளை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில்தான், வாரன் பஃபட், A பங்குகளான 1,600 பங்குகளை B பங்குகளாக மாற்றி, அதை நான்கு குடும்ப அறக்கட்டளைகளுக்கும் வழங்குவதற்கான மற்றொரு உயிலை எழுதியிருக்கிறார்.

வாரன் பஃபெட்

மேலும், தனது மூன்று பிள்ளைகளும் அவர்களின் வாழ்நாள் முழுவதும் படிப்படியாக இந்த நன்கொடைகளை கொடுப்பார்கள் எனவும் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன் வாரன் பஃபெட் $60 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்துகளை பல்வேறு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இதில் சுமார் $43 பில்லியன் டாலர் பில் - மெலிண்டா கேட்ஸ் நடத்தும் கேட்ஸ் அறக்கட்டளைக்கு மட்டுமே வழங்கியிருந்தது குறிப்பிடதக்கது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/ParthibanKanavuAudioBook

'கடனை கட்டு!' நெருக்கிய குழுத் தலைவி; ரூ.90,000 கடனை தள்ளுபடி செய்த ஆட்சியர்-நெகிழ்ந்த தொழிலாளி

திருச்சி மாநகரம், பாலக்கரை தாமோதரன் எடத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது: 42). கூலித் தொழிலாளியான இவர், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வள்ளி. இவர்களு... மேலும் பார்க்க

''விலா எலும்பு உடைஞ்சும் எங்கம்மா கருவை கலைக்கல'' - ஒரு கலெக்டரின் கதை

''எங்கம்மா அப்போ அஞ்சு மாச கர்ப்பிணியா இருந்தாங்க. ஒருநாள் அங்கன்வாடிக்காக தண்ணி எடுத்துட்டு குடத்தை இடுப்புல வெச்சுக்கிட்டு நடந்து வந்திருக்காங்க.அந்த நேரத்துல யாரோ ஒருத்தர் டூ வீலரை அம்மா மேல மோதியி... மேலும் பார்க்க

`இனிமே பயப்பட மாட்டேன்கா..!’ - விபத்தில் கால்களை இழந்த விஜய்; கடை வைத்து கொடுத்த விகடன் வாசகர்கள்

ரயில் விபத்தில் தன்னுடைய இரண்டு கால்களையும் இழந்த வாணியம்பாடியைச் சேர்ந்த விஜய்யையும், 'கால் இல்லைன்னா என்ன; தாலிக்கட்ட கை தானே வேணும்' என்று, விஜய்யை மருத்துவமனையிலேயே திருமணம் செய்துகொண்ட ஷில்பாவைய... மேலும் பார்க்க

``ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவு; மறக்க முடியாத மகிழ்ச்சி..'' - நெகிழ வைத்த பள்ளி மாணவர்கள்..!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரஹ்மத் நகரில் உள்ளது மாக்தலீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் இப்பள்ளி மாணவர்கள் நகரில் உள்ள ஆதரவற்ற நபர்களுக்கு மதிய உணவுகளை வழங்... மேலும் பார்க்க

VKT Balan: 'பலருக்கும் இன்ஸ்பிரேஷன்' - மதுரா டிராவல்ஸ் வி.கே.டி. பாலன் காலமானார்!

மதுரா டிராவல்ஸ் லிமிடெட் தலைவர் வி.கே.டி. பாலன் உடல்நலக்குறைவால் காலமானார்.டிராவல்ஸ் துறையின் முன்னோடியான வி.கே.டி. பாலன் இன்று இயற்கை எய்தியிருக்கிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர் தன்னுடைய... மேலும் பார்க்க