What to watch on Theatre: சப்தம், அகத்தியா, கூரன் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?
சப்தம் (தமிழ்)

'ஈரம்', 'வல்லினம்', 'குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சப்தம்'. 'ஈரம்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி - அறிவழகன் இணைந்திருக்கின்றனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அமானுஷ்ய புலனாய்வாளர் (paranormal investigator) அடிப்படையாகக் கொண்ட ஹாரர் திரில்லர் திரைப்படமான இது இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
அகத்தியா (தமிழ்)

பா.விஜய் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அகத்தியா'. அர்ஜுன், ராஷி கண்ணா, யோகி பாபு, எட்வர்ட் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்ஷன், அட்வன்சர் திரைப்படமான இது இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கூரன் (தமிழ்)

நித்தின் வேமுபடி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், Y.G.மகேந்திரன், பாலாஜி சக்திவேல், சத்யன், ஜார்ஜ் மரியம், இந்திரஜ ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கூரன்'. தாய் நாய்க்கு நடந்த அநீதிக்காக நீதி கேட்டு, வழக்குத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வாதாடுகிறார் வழக்கறிஞராக இருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர். நாய் நீதிமன்ற கூண்டேறி சாட்சி சொல்லி வழக்கு நடைபெறும் வித்தியாசமான சஸ்பன்ஸ் திரில்லர் திரைப்படமான இது இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
கடைசி தோட்டா (தமிழ்)

நவீன் குமார் இயக்கத்தில் ராதா ரவி, ஶ்ரீகுமார் கணேஷ், வனிதா விஜயகுமார், யாஷர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'கடைசி தோட்டா'. க்ரைம் திரில்லர் திரைப்படமான இது இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Machante Malakha (மலையாளம்)

பூபன் சாமுவேல் இயக்கத்தில் ஷோபின் ஷாகிர், நமிதா பிரமோத், திலேஷ் போதன், தயன் ஶ்ரீனிவாசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'Machante Malakha'. நடத்துனராகப் பணிபுரியும் ஷோபின் ஷாகிரை திருமணம் செய்துகொள்ளும் நமிதா பிரமோத், ஷோபின் ஷாகிரின் குறைகளை புரிந்துகொண்டு இருவரும் உறவுச் சிக்கல்களைக் கையாளுவதுதான் இதன் கதைக்களம். இத்திரைப்படம் நேற்று (பிப் 27) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Mazaka (தெலுங்கு)

திரிநாத ராவ் நக்கினா இயக்கத்தில் சந்தீப் கிஷான், ரிது வர்மா, ராவ் ரமேஷ், அன்ஷு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Mazaka'. காமெடி ரொமான்டிக் திரைப்படமான இது இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Crazxy (இந்தி)

கிரீஸ் கோலி இயக்கத்தில் ஷோகும் ஷா, டினு ஆனந்த், நிமிஷா, ஷில்பா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Crazxy'. திரில்லர் திரைப்படமான இது இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
Superboys of Malegaon (இந்தி)

ரீமா கக்டி இயக்கத்தில் ஆதர்ஷ், வினீத் குமார், ஷாஷாங்க் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'Superboys of Malegaon'. நசிர் ஷைக் என்ற இயக்குநரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படிருக்கும் இத்திரைப்படம் இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
The Brutalist (ஆங்கிலம்)
பிராடி கார்பட் இயக்கத்தில் அட்ரியன் பிராடி, பெலிசிட்டி ஜோன்ஸ் நடிப்பில் உருவாகியிக்கும் திரைப்படம் 'The Brutalist'. திரில்லர் திரைப்படமான இது இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.
A Complete Unknown (ஆங்கிலம்)

ஜேம்ஸ் பேன்கோல்டு இயக்கத்தில் திம்மோதி, எட்வர்டு, எல்லி பென்னிங் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'A Complete Unknown'. இசையை மையமாகக் கொண்ட இத்திரைப்படம் இன்று (பிப் 28) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.