செய்திகள் :

Women's WC: பாகிஸ்தான் வீராங்கனைகளிடம் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்க மாட்டார்களா? மௌனம் கலைத்த BCCI!

post image

சமீபத்தில் நடந்து முடிந்த 17-வது ஆசிய கோப்பைத் தொடரில் என்ன நினைத்து இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இருக்கும்படி போட்டி அட்டவணை தயார் செய்தார்களோ, அதற்கேற்றாற்போலவே தொடச்சியாக லீக், சூப்பர் 4, இறுதிப் போட்டி என 3 ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தியா, பாகிஸ்தான் மோதின.

மூன்று போட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்று சாம்பியன் ஆனது.

ஆனால், இந்த மூன்று போட்டியிலும் இந்தியா வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காதது, களத்தில் இரு அணி வீரர்களும் சைகைகள் காட்டியது, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மற்றும் அந்நாட்டு அமைச்சர் என்பதால் என்ற காரணத்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியின் கரங்களால் கோப்பை வாங்க மாட்டோம் என இந்தியா வீரர்கள் புறக்கணித்தது ஆகிய சர்ச்சைகள் ஆசிய கோப்பை தொடருக்கு மிகப்பெரிய விளம்பரமாகவும் அமைந்தது.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை

இத்தகைய சூழலில், இந்தியா இலங்கை இணைந்து நடத்தும் மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 30-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில், இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் ஞாயிற்றுக் கிழமை (அக்டோபர் 5) கொழும்பு மைதானத்தில் நேருக்கு நேர் மோதுகிறது.

இந்நிலையில் இதிலும் பாகிஸ்தான் வீராங்கனைகளிடம் இந்திய வீராங்கனைகள் கைகுலுக்கமாட்டார்களா என்ற கேள்வியெழுந்திருக்கிறது.

இது குறித்து BBC Stumped நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா, "என்னால் எதையும் முன்கூட்டியே கூற முடியாது.

ஆனால், குறிப்பிட்ட அந்த விரோத நாட்டுடனான எங்கள் உறவு அப்படியே உள்ளது. கடந்த வாரத்தில் (ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் விவகாரம்) இருந்து எந்த மாற்றமும் இல்லை.

BCCI செயலாளர் தேவஜித் சாய்கியா
BCCI செயலாளர் தேவஜித் சாய்கியா

கொழும்புவில் பாகிஸ்தானுக்கெதிரான போட்டியில் இந்தியா விளையாடும். அதில், கிரிக்கெட்டின் அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படும்.

கிரிக்கெட்டின் எம்.சி.சி (MCC) விதிமுறைகளில் என்ன இருந்தாலும் பின்பற்றப்படும் என்று மட்டுமே நான் உறுதியளிக்க முடியும்.

கைகுலுக்குவார்களா, கட்டிப்பிடிப்பார்களா என இந்த நேரத்தில் எதையும் நான் உங்களுக்கு உறுதியளிக்க முடியாது" என்று கூறினார்.

Asia Cup: கோப்பையைப் பெற சூர்யகுமாருக்கு கண்டிஷன் - பாகிஸ்தான் அமைச்சர் சொன்னதென்ன?

ஆசியக்கோப்பை 2025 இறுதிப்போட்டி கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி நடைபெற்றது. இதில் வெற்றிபெற்ற இந்திய அணி, ஆசியா கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக இருக்கும் பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வியின் கைகளால்... மேலும் பார்க்க

Chahal: "அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று 2 மாதத்திலேயே தெரிந்துவிட்டது" - முன்னாள் மனைவி தனஸ்ரீ

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான சஹாலுக்குக் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 22ம் தேதி குர்கானில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நடிகை, நடன இயக்கு... மேலும் பார்க்க

BCCI: 'மாத சம்பளம் இல்லை; பிசிசிஐ-யின் 37- வது தலைவர்'- யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?

பிசிசிஐ தலைவர் பதவியை வகித்து வந்த 70 வயதுடைய ரோஜர் பின்னியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிசிசிஐ-யின் 37-வது தலைவராக பதவியேற்றிற்கும் ... மேலும் பார்க்க

``கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டு வந்த முதல் கேப்டன் நீங்களா'' -பத்திரிகையாளர் கேள்வி; SKY பதிலென்ன?

துபாயில் நேற்று நடைபெற்ற (செப்டம்பர் 28) ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் ஆனது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றைப் போலவே இறுதிப்போட்டியிலும் பாகிஸ்தான் வீரர்களிடம... மேலும் பார்க்க

Chris Woaks: "நேற்றுதான் அறிமுகமானதுபோல இருக்கிறது!" - 15 வருட சர்வதேச கரியர்; கிறிஸ் வோக்ஸ் ஓய்வு

இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான கிறிஸ் வோக்ஸ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்திருக்கிறார்.2011-ல் ஆஸ்திரேலியாவுக்கெதிரான தொடரின் (ODI & T20) மூலம் சர்வதேச கிரிக... மேலும் பார்க்க

"பாகிஸ்தான் வீரர்களை வெறுக்கவில்லை; ஆனால்" - பஹல்காம் தாக்குதலில் மகனை இழந்த தந்தை சொல்வது என்ன?

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நேற்று நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணி கடைசி ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.146 ரன்கள் இலக்கை நோக்கி சேஸிங்கில் இறங்கிய இந்திய அணி 20 ரன்க... மேலும் பார்க்க