செய்திகள் :

WTC Final: டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல இந்தியாவுக்கு என்னென்ன வழி இருக்கிறது? |முழு விவரம்

post image

பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. நாளை (நவம்பர் 22 முதல் ஜனவரி 7 வரை) தொடங்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர், டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ஃபைனலுக்கு இந்திய அணி செல்வதற்கு மிக முக்கியமான தொடர். உண்மையில் இந்தியா நியூசிலாந்திடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழப்பதற்கு முன்பு வரை, எளிதாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்லும் சூழல்தான் இருந்தது.

பார்டர் கவாஸ்கர் டிராபி

ஆனால், அந்தத் தோல்விக்குப் பிறகு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, அந்த இடத்தை இரண்டாம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவுக்குத் தாரைவார்த்தது. அதோடு, பார்டர் கவாஸ்கர் தொடரை 4 - 0 அல்லது 5 - 0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே எளிதாக ஃபைனலுக்குச் செல்லலாம் என்ற இக்கட்டான சூழலையும் சொந்த செலவில் உருவாக்கிக் கொண்டது. ஒருவேளை, இந்தத் தொடரை மேலே குறிப்பிட்டுள்ளபடி இந்தியாவால் வெல்ல முடியவில்லையென்றால், கையில் நோட்டு பேனாவோடு மற்ற அணிகளின் வெற்றி, தோல்வியைக் கணக்கிட்டு, பைனலுக்குச் செல்ல ஏதாவது வழி இருக்கிறதா என்று கணக்குப் போட வேண்டும். அவை என்னவென்பதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்...

* 4 (இ) - 1 (ஆஸி)

இந்தத் தொடரில் இந்திய அணி ஒரு போட்டியில் தோற்றாலே மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைப் பொறுத்தே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல முடியும். அதில், இந்திய அணி 4 போட்டிகளில் வென்று ஒரு போட்டியில் தோல்வியடையும்பட்சத்தில், இங்கிலாந்து நியூசிலாந்துக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில் டிரா செய்தாலோ அல்லது தென்னாப்பிரிக்காவுக்கெதிராக ஒரு போட்டியில் இலங்கையோ, பாகிஸ்தானோ டிரா செய்தாலோ மட்டும்தான், ஃபைனலுக்குச் செல்ல முடியும்

இந்திய அணி - கம்பீர், ரோஹித்

* 3 (இ) - 2 (ஆஸி)

இந்தியா 3 - 2 என்று இந்தத் தொடரை வெல்லும்பட்சத்தில், இந்திய அணி ஃபைனலுக்குச் செல்வதற்கு, நியூசிலாந்தை ஒரு போட்டியில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவைக் குறைந்தது ஒரு போட்டியில் இலங்கையும் வீழ்த்துவதோடு, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தலா இரண்டு போட்டியில் இரண்டில் தென்னாப்பிரிக்கா தோற்க வேண்டும்.

* 2 (இ) - 2 (ஆஸி)

ஒருவேளை இந்தத் தொடர் 2 - 2 என சமனில் முடிந்தால், இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியில் நியூசிலாந்தும், தென்னாப்பிரிக்காவுக்கெதிராக ஒரு போட்டியில் இலங்கையும், இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டியில் ஆஸ்திரேலியாவும் தோற்றால், இந்திய அணி ஃபைனலுக்குச் செல்லலாம்.

விராட் கோலி, கே.எல்.ராகுல்

* 2 (இ) - 1 (ஆஸி)

மேலே குறிப்பிட்ட மூன்றில் எதுவும் நடக்காமல், 2 - 1 என இந்திய அணி தொடரைக் கைப்பற்றினால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும். அதாவது, இங்கிலாந்துக்கெதிரான தொடரில் நியூசிலாந்து ஒரு போட்டியில் வெற்றிபெற்று, ஒரு போட்டியை டிரா செய்ய வேண்டும். மேலும், இலங்கை தென்னாப்பிரிக்காவிடம் இரண்டு போட்டியில் தோற்று, ஆஸ்திரேலியாவிடம் இரண்டு போட்டியில் வெற்றிபெற வேண்டும். இது நடந்தால்தான் இந்திய அணியால் ஃபைனலுக்குச் செல்ல முடியும்.

* இவையெதுவுமே நடக்காமல், இந்தத் தொடரில் ஒரேயொரு டெஸ்டில் மட்டுமே இந்திய அணி வெற்றிபெறுகிறது எனில், யாருடைய வெற்றி, தோல்வியையும் கணக்கு செய்யாமல் நேராக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27க்குத் தயாராகலாம்.

இந்திய அணி

மறுபக்கம், இலங்கை அணி தென்னாப்பிரிக்காவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் (நவம்பர் 27 - டிசம்பர் 9), இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் 3 போட்டிகள் டெஸ்ட் தொடரிலும் (நவம்பர் 28 - டிசம்பர் 18), பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் 2 போட்டிகள் டெஸ்ட் தொடரிலும் (டிசம்பர் 26 - ஜனவரி 7), ஆஸ்திரேலிய அணி இலங்கையில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் (ஜனவரி 29 - பிப்ரவரி 10) விளையாடவிருக்கிறது. இந்தத் தொடர்களுக்குப் பிறகு நடைபெறும் டெஸ்ட் போட்டிகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப்பட்டியலுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

IPL Mega Auction: `நடராஜனுக்காக போட்டியிட்ட 3 அணிகள்' - ரூ.10 கோடியை தாண்டிய ஏலம்

ஐ.பி.எல் மெகா ஏலம் சவுதியில் நடந்து வருகிறது. 500 வீரர்களுக்கும் மேல் இந்த ஏலத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர். இதில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கான செட் ஒன்று ஏலம் விடப்பட்டது. இந்த செட்டில் தமிழக வீரரான... மேலும் பார்க்க

AUSvIND: `நான் வந்துட்டேன்னு சொல்லு' அதிரடி கோலி; தடுமாறும் ஆஸ்திரேலியா- பெர்த் டெஸ்ட் Day 3 Report

பெர்த் டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. ஜெய்ஸ்வாலின் அசாத்திய இன்னிங்ஸ், கோலியின் சதம், நிர்ணயிக்கப்பட்ட பெரிய டார்கெட் என எல்லாமே இந்திய அணிக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. மூ... மேலும் பார்க்க

Yashaswi Jaiswal : `மும்பையின் குடிசைவாசி டு பெர்த் Standing Ovation!' - எளியவனின் சரித்திர வெற்றி

'இது கதைகள் உருவாக்கப்படுவதற்கான இடம், இது கதைகள் சொல்லப்படுவதற்கான இடம், இது கதைகள் பகிரப்படுவதற்கான இடம். இன்று நாம் இன்னொரு புதிய கதையை உருவாக்கி இங்கிருந்து உலகிற்கு பகிரப் போகிறோம்.' பூர்வக்குடிக... மேலும் பார்க்க

AUSvIND: `4.30 மணி நேர ஸ்டாண்டிங்; ராகுல் -ஜெய்ஸ்வால் கூட்டணி அசத்தல்!' -பெர்த் டெஸ்ட் Day2 Report!

பெர்த் டெஸ்ட்டின் இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்திருக்கிறது. இந்திய அணி இரண்டாம் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு விக்கெட் எதையும் இழக்காமல் வலுவான நிலையில் இருக்கிறது. இரண்டாம் நாளில் என்ன நடந்தது?Starcமுதல் ... மேலும் பார்க்க

IPL Mega Auction Live: நாளை நடைபெறுகிறது ஐ.பி.எல் மெகா ஏலம்..! - எப்போது, எங்கு, எதில் பார்க்கலாம்?!

ஐ.பி.எல் 18-வது சீசன் வரும் மார்ச் மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது.ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒரு முறை ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இம்முறை மெகா ஏலம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக... மேலும் பார்க்க

Pant: `IPL ஏலத்தில் எந்த அணிக்குச் செல்லப்போகிறீர்கள்?' - நாதன் லயன் கேள்வி... பண்ட் பதிலென்ன?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர் கவாஸ்கர் தொடர் பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கியது. நாளை மறுநாள் சவுதி அரேபியாவில் ஐ.பி.எல் மெகா ஏலம் (நவம்பர் 24, 25) தொடங்கவிருக்கிறது. இதில், டெல்லி அணியி... மேலும் பார்க்க