செய்திகள் :

XEV 9E: "இந்த காருக்கான சவுண்டை நாங்கள் உருவாக்கினோம்" - ரஹ்மானின் இன்ஸ்டா பதிவு வைரலாக காரணம் என்ன?

post image

மஹிந்திரா நிறுவனம் தனது புதிய EV-BE6, XEV 9E கார்களை அறிமுகப்படுத்தியது. இந்த BE6 மற்றும் XEV 9E-யின் ஒலி வடிவமைப்பில் ஆஸ்கர் நாயகன் AR ரஹ்மானும் பணியாற்றியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் முன்பு வெளியிட்ட ஒரு வீடியோவில், ``நான் ஒலி வடிவமைத்த காரிலிருந்து தனக்கென ஒன்றை முன்பதிவு செய்யப் போகிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

விளையாட்டாகவே அதைக் கூறினார் எனக் கருதப்பட்டது. ஆனால், அவர் உண்மையிலேயே புதிய XEV 9E - SUV காரை வங்கியிருக்கிறார்.

AR ரஹ்மான் புத்தம் புதிய XEV 9E காருடன் இருக்கும் படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மஹிந்திரா நிறுவனம் டாப்-எண்ட் பேக் த்ரீ வேரியண்டை மட்டுமே டெலிவரி செய்யத் தொடங்கியுள்ளது. AR ரஹ்மான் வாங்கியிருப்பதும் அதே வேரியண்ட் கார்தான்.

இந்தக் கார் குறித்து அவர் தன் இன்ஸ்டாகிராம் பதிவில், ``எனக்குப் பிடித்த இந்திய EV கார் மஹிந்திரா XEV 9e வாங்கினேன். இந்த ஸ்டைலான இந்திய காருக்கான ஒலியை நாங்கள் வடிவமைத்தோம்... (இதற்கும் பணம் செலுத்தினோம் )" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX

Bobby Simha: சென்னையில் கார் விபத்து; 6 வாகனங்கள் சேதம்; போதையில் இருந்த ஓட்டுநர் கைது!

தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹாவின் கார் சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பெண் உள்... மேலும் பார்க்க

Bombay: `பாம்பே படம் இன்று வெளியானால்... நாட்டின் சகிப்புத்தன்மை?’ - ராஜீவ் மேனன் ஓப்பன் டாக்

மணிரத்னத்தின் 'பாம்பே' படம் இன்று திரையரங்குகளில் வெளியானால் பெரும் சவால்களை சந்திக்கும். அந்தளவு இந்தியா சகிப்புத் தன்மையில்லாத நாடாக மாறிவருகிறது என பாம்பே படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவி... மேலும் பார்க்க

Thug Life: "நான் ராமர் இல்ல; ராமரின் அப்பா வகையறா" - திருமணம் குறித்த கேள்விக்குக் கமல் ஹாசன் பதில்

கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியின் 'தக் லைஃப்' ரிலீஸ் வருகிற ஜூன் 5ம் தேதி என அறிவிக்கப்பட்டிருப்பதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 'நாயகன்' படத்திற்குப் பின் 36 ஆண்ட... மேலும் பார்க்க