செய்திகள் :

Yoga: "கரீனா கபூர் வந்த பிறகுதான் யோகா... என் குழந்தைகளுக்கு ஸ்பைடர் மேன் தெரியாது; ஆனா...” - நமீதா

post image

11 ஆவது சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் வேலூரில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் நமீதா கலந்துகொண்டிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “2007-ல் யோகா ஆரம்பமாகவில்லை. அது 5 ஆயிரம் வருடம் பழமையானது. 2007இல் பாலிவுட் நடிகை கரீனா கபூர் யோகா மூலம் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்தது தெரிந்த பின்தான். இங்கு யோகா டிரண்ட் ஆனது.

நமீதா
நமீதா

ஆனால் இதற்கு முன்பே நம் நாட்டில், நமது கலாசாரத்திலேயே யோகா இருந்திருக்கிறது. நம்முடைய பாரம்பரியத்தை மறந்துவிடக் கூடாது.

நம் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தெரிந்தால் நல்லதுதான். ஆனால் அதற்கு முன் கண்டிப்பாகத் தாய்மொழி தெரிந்திருக்க வேண்டும். அதுதான் நம்முடைய பெருமை.

என் குழந்தைகளுக்கு தமிழ், தெலுங்கு, குஜராத்தி தெரியும். ஏனென்றால் இது அவர்கள் தாய்மொழி. என் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேச மாட்டேன். என் குழந்தைக்கு ஸ்பைடர் மேன், சூப்பர் மேன் தெரியாது. ஆனால் கண்டிப்பாக ஜெய் அனுமான் தெரியும்.

நமீதா
நமீதா

என் குழந்தைகளுக்கு அனுமான் என்றால் மிகவும் பிடிக்கும். இதை நான் பெருமையாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் யோகா செய்தது கிடையாது.

ஏனென்றால் என் பெற்றோருக்கு அது பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. தெரிந்திருந்தால் நானும் உடலைக் கட்டுப்பாட்டோடு வைத்திருந்திருப்பேன்” என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

ஜூலையில் திரைக்கு வரும் விஜய் சேதுபதி, அனுஷ்கா, பஹத்பாசில், சசிகுமார் படங்கள் - ஒரு பார்வை.!

சினிமா ரசிகர்களுக்கு வரும் ஜூலை மாதம் ஒரு கொண்டாட்டமான மாதம். கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களுக்கு மேல் திரைக்கு வருகிறது. அதில் விஜய் சேதுபதி, அனுஷ்கா, வடிவேலு, சித்தார்த், சசிகுமார், விமல் என பலரின் படங... மேலும் பார்க்க

RJB: 'RJ பாலாஜி to RJB' - "பெயரை மாற்றக் காரணம் இதுதான்" - ஆர்.ஜே.பாலாஜி ஷேரிங்ஸ்

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 45வது படத்திற்கு 'கட்சி சேர', 'ஆச கூட' போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார... மேலும் பார்க்க

What to watch: 'குபேரா', 'DNA', 'சித்தாரே ஜமீன் பர்' - இந்த வாரம் வெளியாகியுள்ள படங்கள் & சீரிஸ்

தியேட்டர் ரிலீஸ்கள்:குபேரா:தனுஷ், டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் 'குபேரா'. நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு தே... மேலும் பார்க்க