செய்திகள் :

Yuvan: "கிட்டதட்ட STR 50 டிராப்... இப்போ நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான்'' - தேசிங்கு பெரியசாமி

post image

`ஜோ' படத்தை தொடர்ந்து ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் `ஸ்வீட்ஹார்ட்'. இப்படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் தேசிங்கு பெரியசாமி, இளன், பொன்ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

தேசிங்கு பெரியசாமி பேசுகையில், ``ஸ்வீட் ஹார்ட் டைட்டிலே ரொம்ப யுத்ஃபுல்லாக இருக்கு. படத்தினுடைய டிரெய்லரும் ரொம்ப சுவாரஸ்யமாக இருந்துச்சு. நல்ல வைப் இருக்கு. ரியோவுடைய கலர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அது நம்ம ஊரின் கலர். யுவன் சாருக்காகத்தான் இன்னைக்கு இந்த நிகழ்வுக்கு வந்திருக்கேன். `STR -50' படம் நடக்கிறதுக்கு முக்கிய காரணமே யுவன் சார்தான். நான் யுவன் சார்கிட்ட கதை சொன்னேன். அவர் பதிலாக எதுவும் கேட்காமல். `எப்போ வேலையை ஆரம்பிக்கிறோம்'னுதான் கேட்டாரு. அவர் சிம்பு சாருக்கு கால் பண்ணி பேசி ஒரு ஊக்கம் கொடுத்தாரு. கிட்டதட்ட `STR -50' திரைப்படம் டிராப்தான். இப்ப அந்தப் படம் நடக்கிறதுக்கு காரணமே யுவன் சார்தான். எங்களுக்கு அவர் தெம்பாக இருந்தாரு" என்றார்.

Desingu Periasamy - Sweet Heart Event

இவரைத் தொடர்ந்து வந்து பேசிய இளன், ``யுவன் சாருக்காக நான் என்ன வேணாலும் பண்ணுவேன். யுவன் சாருக்காக உயிரைக்கூட கொடுப்பேன்னு இப்போதான் இயக்குநர் தேசிங்கு பெரியசாமிகிட்ட பேசிட்டு இருந்தேன். யுவன் சார் ஒரு ப்ரஷ் ஸ்டார்ட் மாதிரி. நான் `ப்யார் ப்ரேமா காதல்' படத்துக்கு முன்னாடி ஒரு படம் பண்ணினேன். அந்தப் படம் ரிலீஸே ஆகல. அப்போ நான் கொஞ்சம் டவுன்ல இருந்தேன். எப்போ யுவன் சாரை சந்திச்சேனோ, அப்போவே எல்லாம் மாறிடுச்சு. அந்த மேஜிக் அவர்கிட்ட இருக்கு. யுவன் சாருக்கு `டிரக் டீலர், மார்டன் மேஸ்ட்ரோ, கிங்'னு பல பெயர்கள் இருக்கு. அவருக்கு தெரிஞ்சவங்க, அவருக்குக் கொடுக்கிற ஒரே டைட்டில் இந்த படத்தோட டைட்டிலான `ஸ்வீட் ஹார்ட்'ங்கிற பெயர்தான்" எனக் கூறி முடித்துக் கொண்டார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here: https://bit.ly/VikatanWAChannel

Harris Jayaraj: `அடுத்த மாதம் 'துருவ நட்சத்திரம்'; பலமுறை பார்த்துவிட்டேன்’ - ஹாரிஸ் கொடுத்த அப்டேட்

கெளதம் மேனன் - விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்தது.ஆனால், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியில... மேலும் பார்க்க

Good Bad Ugly: `AK is red Dragon' ; `டேவிட் பில்லா' ரெபரென்ஸ் - மீண்டும் கேங்ஸ்டராக அஜித்!

அஜித் நடித்திருக்கும் `குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. `மார்க் ஆண்டனி' வெற்றிக்குப் பிறகு இப்படத்தை ஆதிக் ரவிசந்திரன் இயக்கியிருக்கிறார். `விடாமுயற்சி' திரைப்படத்தை தொ... மேலும் பார்க்க

அகத்தியா விமர்சனம்: `வாட் ப்ரோ... இட்ஸ் வெரி ராங் ப்ரோ!' சித்த மருத்துவம் x அலோபதி விவாதம் தேவைதானா?

சினிமாவில் கலை இயக்குநராக விரும்பும் அகத்தியன் (ஜீவா) பாண்டிச்சேரியில் தனது முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். ஷூட்டிங் வேலை நடந்து கொண்டிருக்கும் வேளையிலேயே ஒரு பியானோ... மேலும் பார்க்க

`ரஜினி சாரிடம் எங்க அப்பா சொன்ன வார்த்தை..!' - ஜெயம், எம்.குமரன் ரீரிலீஸ் பற்றி இயக்குநர் மோகன் ராஜா

'ஜெயம்', 'எம் குமரன் s/o மகாலட்சுமி’ ரீரிலீஸ்ரவி மோகன் அறிமுகமான 'ஜெயம்', ''எம் குமரன் s/o மகாலட்சுமி' படங்கள் இப்போது ரீரிலீஸ் ஆக உள்ளன. எடிட்டர் மோகன் தயாரிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் ரவி மோகன் நட... மேலும் பார்க்க

What to watch on Theatre: சப்தம், அகத்தியா, கூரன் -இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

சப்தம் (தமிழ்)சப்தம்'ஈரம்', 'வல்லினம்', 'குற்றம் 23' படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில், ஆதி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'சப்தம்'. 'ஈரம்' படத்திற்குப் பிறகு மீண்டும் ஆதி - அறிவழகன் இணைந்த... மேலும் பார்க்க