செய்திகள் :

``Zero Defect, Zero Effect; தொழில்நுட்பத்தில் புரட்சி செய்ய இதுவே சரியான நேரம்'' - பிரதமர் மோடி

post image

பெங்களூரு மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த எலக்ட்ரானிக் சிட்டி வரையிலான மெட்ரோ ரயில் இணைப்பான மஞ்சள் வழித்தட சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். புதிய மெட்ரோ ரயிலைக் கொடி அசைத்து இயக்கி வைத்த மோடி, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் பள்ளி குழந்தைகள், பொதுமக்களுடன் பயணித்தார்.

பெஙகளூரில் மோடி

இதையடுத்து பேசியிருக்கும் பிரதமர் மோடி, "உலகப் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளில் டாப் 10 பட்டியலிலிருந்து, டாப் 5 பட்டியலுக்கு முன்னேறியிருக்கிறது இந்தியா. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பெங்களூரு, இந்தியாவை தொழில்நுட்பத்தில் தன்னிறைவுப் பெற்ற நாடாக முன்னேற்ற பெரும் பங்காற்ற வேண்டும்.

'Zero Defect, Zero Effect' என்ற கொள்கையின் அடிப்படையில் நம் நாட்டிற்குத் தேவையான தொழில்நுட்பப் பொருள்கள் அனைத்தையும் நாமே தயாரிக்கும் அளவிற்கு தன்னிறைவைப் பெற்று முன்னேற வேண்டும். 'Zero Defect, Zero Effect' என்றால் எந்தக் கோளாறும் இல்லாத, சுற்றுச் சூழலிற்குத் தீய பாதிப்பை ஏற்படுத்தாத தொழில்நுட்பப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும் என்பதுதான்.

'டெக் ஆத்மநிர்பர் பாரத் (Tech Atmanirbhar Bharat)' என்ற பெயரில் புதிய திட்டத்தின் மூலம் இந்தியா தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்குவதில் இந்த அரசு முக்கியக் கவனம் செலுத்தப்போகிறது. இந்தியாவை தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம். தொழில்நுட்பத்தில் புரட்சிகள் செய்யவும் இதுவே சரியான நேரம்" என்று பேசியிருக்கிறார் பிரதமர் மோடி.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

தூய்மைப் பணியார்கள் போராட்டம்: `துறை அமைச்சர் பேசவில்லையா? முதல்வர் சொன்ன விஷயம்'- கே.என்.நேரு பதில்

எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், த.வெ.க தலைவர்... மேலும் பார்க்க

சமூக விரோதிகளின் கூடாரமாகும் ஆண்டிபட்டி வாரச் சந்தை கடைகள்; அலட்சியம் காட்டும் அதிகாரிகள்!

தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 100-150 கிராம மக்கள் காய்கறி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும் இந்த காய்கறி சந்தைக்குத்... மேலும் பார்க்க

Stray Dogs: ``ரூ.15,000 கோடி இருக்கிறதா?'' - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மேனகா காந்தி கேள்வி

தெருநாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வலர... மேலும் பார்க்க

Stray Dogs: "நாய்களைப் பாதிக்கும்; ஒரே வழி..." - உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பீட்டா அமைப்பு எதிர்வினை

தெரு நாய்க்கடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.நேற்றைய விசாரணையில், ``தெரு நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களை, விலங்குகள் நல ஆர்வல... மேலும் பார்க்க

Roundup: தீவிரமடையும் தூய்மை பணியாளர்கள் போராட்டம் டு கர்நாடக அமைச்சரின் ராஜினாமா வரை|11.8.2025

ஆகஸ்ட் 11 முக்கியச் செய்திகள்!எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் 11 நாள்களுக்கு மேலாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வ... மேலும் பார்க்க

`பாலாற்றில் கலக்கும் தோல் தொழிற்சாலை கழிவுநீர்' 3 மாவட்ட கலெக்டர்களிடம் காட்டமான உச்ச நீதிமன்றம்

தமிழ்நாட்டில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் பாலாற்றில், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவுகளை கலப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதா... மேலும் பார்க்க