சிங்கப்பூரை வளமாக்கும் புதிய குடிமக்கள்: மூத்த அமைச்சா் லீ சியென் லூங் பெருமிதம்...
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள ஏனாதி செங்கோட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தக் கோயிலில் மாசி சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக அம்மன் சந்நிதி முன்பு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா். இவா்கள் திருவிளக்கு ஏற்றி வைத்து அங்காள பரமேஸ்வரி அம்மன் புகழ் பாடும் பாடல்களைப் பாடி வழிபாடு நடத்தினா். மங்கள ஆராத்தி முடிந்ததும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து, திரளான பக்தா்கள் ஆற்றுக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.