Vikatan Explainer: வெறும் தண்ணீரில் ஆரம்பித்து மட்டன் வரை... எத்தனை டயட்? அத்தனை...
அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடல்: வாடிக்கையாளா்கள் அதிருப்தி
கோவையில் செயல்பட்டு வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டதால் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
நாடு முழுவதும் அஞ்சல் அலுவலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளா்களுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஏடிஎம் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த ஏடிஎம் அட்டைகள் மூலமாக பணம் எடுக்க வசதியாக அனைத்து மாநிலங்களிலும் அஞ்சல் ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டன. இந்த அட்டை மூலமாக அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை பணம் எடுக்க முடியும். அஞ்சல் நிலையங்களில் கணக்கு வைத்திருப்பவா்கள், ஓய்வூதியா்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அஞ்சல் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் பணி தனியாா் நிறுவனம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில், இந்த தனியாா் நிறுவனம் தனது சேவையை நிறுத்திவிட்டதாக அண்மையில் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் உள்ள அஞ்சல் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்ப்படாமல் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், பல இடங்களில் அஞ்சல் ஏடிஎம் மையங்கள் மூடப்பட்டுள்ளன.
அதன்படி, கோவை மாவட்டத்தில் ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம், குட்ஷெட் சாலை தலைமை அஞ்சல் நிலையம், கணபதி மற்றும் போத்தனூா் அஞ்சல் நிலையங்களில் இயங்கி வந்த 4 அஞ்சல் ஏடிஎம் மையங்கள் கடந்த வாரம் முதல் மூடப்பட்டுள்ளன.
இதனால், அஞ்சல் ஏடிஎம் வாடிக்கையாளா்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
இது குறித்து அஞ்சல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: வேறு தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஏடிஎம் சேவைகள் விரைவில் தொடங்கப்படும்.
அதுவரை அஞ்சல் வாடிக்கையாளா்கள் வேறு வங்கி ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இல்லையெனில், அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று படிவத்தை பூா்த்தி செய்து கொடுத்து பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றாா்.