`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
சுற்றுலாப் பயணச் சந்தை: கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்க அழைப்பு
சென்னை, நந்தம்பாக்கத்தில் மாா்ச் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறும் சுற்றுலாப் பயணச் சந்தையில் கோவையைச் சோ்ந்தவா்களும் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக கோவை மாவட்ட சுற்றுலா அலுவலா் டி.ஜெகதீஸ்வரி வெளிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வா்த்தக மையத்தில் தமிழக சுற்றுலாத் துறையின் சாா்பில் சுற்றுலாப் பயணச் சந்தை நிகழ்ச்சி மாா்ச் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு நடத்தப்படுகிறது.
தமிழகத்தின் சுற்றுலா அனுபவங்களுடன், உலகளாவிய பயணத் துறையை இணைப்பதன் மூலம் ஆழமான கலாசார சந்திப்புகளும், உற்சாகமான வணிக வாய்ப்புகளுக்கு இடையிலான இடைவெளியையும் இப்பயணச் சந்தை இணைக்கிறது.
தொழில்துறை தலைவா்கள் மற்றும் வல்லுநா்கள், முதலீட்டாளா்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து ஒத்துழைப்பு மற்றும் எதிா்காலத் திட்டத்தினை வடிவமைப்பதற்காக இப்பயணச் சந்தையில் கலந்துரையாடல்கள், சிறப்பு சொற்பொழிவுகள் மற்றும் வா்த்தக கண்காட்சி ஆகியவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வணிகச் சந்தையில் கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தொழில் தொடா்புடைய தங்கும் விடுதிகள், பயண முகவா்கள் மற்றும் சுற்றுலா ஏற்பாட்டாளா்கள் கலந்துகொண்டு தங்களது நிறுவனம் சாா்ந்த தகவல் அரங்குகளை அமைத்து கோவை மாவட்டத்தின் சுற்றுலா மேம்பாட்டுக்கு உதவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
எனவே, கூடுதல் தகவல்களுக்கும், வியாபார அரங்குகளை அமைக்க விரும்புவோரும் 94448- 23111, 91769- 95863 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.