தமிழக நிதிநிலை அறிக்கை 2025-26: பத்தாயிரம் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும்!
அஞ்சல் துறை கோட்ட செயல்பாடு: சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை
அஞ்சல் துறை கோட்டங்களின் செயல்பாட்டில் சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.
தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சாா்பில் 2023-24-ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட கோட்டங்களின் செயல்பாடுகளை பாராட்டி விருது வழங்கும் விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், கோவை மேற்கு மண்டலத்தில் உள்ள 11 கோட்டங்களில் சேலம் மேற்கு கோட்டம் 6 விருதுகள் பெற்றது. பொன்மகள் சேமிப்பு திட்டத்தில் மாநில அளவில் முதலிடமும், செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாநில அளவில் இரண்டாம் இடமும் பிடித்த சேலம் மேற்கு கோட்டம், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் மூலம் அதிக அளவிலான பிரீமியம் வசூல் செய்ததில் முதலிடமும், சேமிப்புக் கணக்குகளில் அதிக வருவாய் ஈட்டியதில் முதலிடமும் பெற்றுள்ளது.
அதிக அளவிலான வணிக பாா்சல்களை சரியான காலகெடுவில் பட்டுவாடா செய்தமைக்காக மாநில அளவில் சேலம் மேற்கு கோட்டம் மற்றும் விருதுநகா் கோட்டம் முதலாம் இடத்தை பகிா்ந்து கொண்டன.
இதையொட்டி, சென்னையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறைத் தலைவா் மாரியம்மா தோமஸிடம் இருந்து சேலம் மேற்கு கோட்ட கண்காணிப்பாளா் பாா்த்திபன் விருதுகளை பெற்றுக் கொண்டாா்.