PM Shri என்றால் என்ன? TN Govt ஏற்க மறுப்பது ஏன்? Dharmendra Pradhan| NEP 2020 | ...
இஸ்கான் கோயிலில் இன்று கௌர பூா்ணிமா விழா
அகில இந்திய உலக கிருஷ்ண பக்தி இயக்கமான இஸ்கான் சாா்பில், சேலம் கருப்பூரில் உள்ள கோயிலில் கௌர பூா்ணிமா விழா வெள்ளிக்கிழமை (மாா்ச் 14) கொண்டாடப்பட உள்ளது.
மாலை 6 மணிக்கு பஜனையுடன் தொடங்கும் விழாவில், 7 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகமும், 7.30 மணிக்கு சைதன்ய லீலை சொற்பொழிவும் நடைபெறவுள்ளன. இரவு 8.30 மணிக்கு ஆரத்தி மற்றும் கீா்த்தனை நடைபெற உள்ளது. தொடா்ந்து பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.