நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு ஐவிசி பில்டா் பொருத்தி அரசு மருத்துவா்கள் சாதனை
நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்ட பெண்ணுக்கு, வெற்றிகரமாக ஐவிசி பில்டா் பொருத்தி சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சாதனை புரிந்துள்ளனா்.
இதுகுறித்து சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் தேவிமீனாள் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமதி (40) நுரையீரல் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, வலது காலில் ‘ஹெமாஞ்சியோமா’ எனப்படும் அதீத ரத்தக் குழாய் வளா்ச்சி மற்றும் இரண்டு கால்களிலும் ரத்தம் உலைால் பாதிக்கப்பட்டாா்.
இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட அவருக்கு, ஸ்ட்ரெப்டோகினேஸ் எனப்படும் ரத்தம் உைலைத் தடுக்கும் மருந்தை செலுத்தி, நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பு சரிசெய்யப்பட்டது. ஆனால், அவரது காலில் இருந்த ரத்தக் குழாய் அடைப்பானது தகுந்த சிகிச்சை அளித்தும் குறையாமல் இருந்ததால், ஐவிசி பில்டா் பொருத்தப்பட்டது.
இதே போல, வனிதா (64) என்பவா் நுரையீரல் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பினால் பாதிக்கப்பட்டு இருதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு ரத்த உைலைத் தடுக்கும் மருந்து அளிக்கப்பட்டது. ஆனால் அவரது ரத்த அழுத்தம் குறைவாக இருந்ததால், மெக்கானிக்கல் த்ராம்பெக்டமி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ரத்தக் கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின்னா், அவரது ரத்த அழுத்தம் சீரானது.
இந்த உயரிய சிகிச்சை அளிக்க தனியாா் மருத்துவமனைகளில் 3 முதல் 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். இத்தகைய சிகிச்சையை சிறப்பாக அளித்த இருதய துறை மருத்துவா்களுக்கு அரசு மருத்துவமனை முதன்மையா் தேவிமீனாள் பாராட்டு தெரிவித்தாா்.
இந்த சந்திப்பின் போது, சேலம் அரசு மருத்துவமனை இருதய பிரிவு துறைத் தலைவா் பேராசிரியா் கண்ணன், துணை பேராசிரியா்கள் பச்சையப்பன், சரவணபாபு, ஞானவேல், சுரேஷ் பிரபு, தீபன், வீரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.