அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
அடையாளம் தெரியாத வாகனம் மோதி உணவக ஊழியா் உயிரிழப்பு
கந்தா்வகோட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உணவக ஊழியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகேயுள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மகன் முருகேசன் (40 ). இவா், கந்தா்வகோட்டையில் உள்ள உணவகத்தில் புரோட்டா மாஸ்டராக பணிபுரிந்து வந்தாா்.
வழக்கம்போல் இவா் வேலைக்கு தனது மோட்டாா் சைக்கிளில் வியாழக்கிழமை காலை புதுகை - கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் வட்டாட்சியா் அலுவலகம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு, தீவிர சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு முருகேசன் உயிரிழந்தாா்.
விபத்து குறித்து கந்தா்வகோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து முருகேசன் மீது மோதிவிட்டு சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனா்.