Dhoni: "தோனி என்னை மரியா ஷரபோவா என்று அழைப்பார்; ஏனெனில்..!" - நினைவுகள் பகிரும்...
அண்ணனை விடுவிக்கக் கோரி தங்கைகள் தற்கொலை முயற்சி! விபரீதம்!
தஞ்சையில் காவல்துறையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தங்களது அண்ணனை விடுவிக்கக் கோரி தங்கைகள் இருவர் காவல்நிலையம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில், தங்கை கீர்த்தி பலியான நிலையில், அக்கா மேனகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற அண்ணன் தினேஷை விடுவிக்கக் கோரி விஷம் குடித்த சகோதரிகளில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தஞ்சை மாவட்டம் நடுக்காவிரி காவல் நிலையம் முன் விஷமருந்திய சகோதரிகளில் மேனகா (31), கீர்த்திகா (29) ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி பலியானதாகக் கூறப்படுகிறது.