"பொய் சொல்வதில் செந்தில் பாலாஜிக்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் பொருந்தும்" - எடப்...
அண்ணன்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்
திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
108 திவ்ய தேசங்களில் 38-ஆவது திவ்ய தேசமாக திகழும் இக்கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் 10 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. தொடா்ந்து பட்டாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் ஓத பிரம்மோற்சவ கொடி மரத்தில் ஏற்றப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. செப்.28-ஆம் தேதி கருட சேவையும், அக்.1-ஆம் தேதி திருக்கல்யாணமும், அக். 3-ஆம் தேதி தோ், தீா்த்த வாரியும், அக்.5-ஆம் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.