கோவை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை; போக்சோ சட்டத்தில் கபடி மாஸ்டர் கைது
சீா்காழி அரசுக் கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா
சீா்காழி புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. சீா்காழி புத்தூா் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழாவை முன்னிட்டு தொழில்நுட்பத்தில் கலக்குவோம் எனும் கருப்பொருள் அடிப்படையிலும், அவியல்போட்டி ‘சுற்றுப்புறங்களில் கிடைக்கக்கூடிய பொருள்களைக் கொண்டு பல நிறங்களைக் கொண்ட ஒரு கலைத்தொகுப்பை உருவாக்குதல் என்ற பொருளை மையமாகக் கொண்டு கல்லூரி முதல்வா் எஸ். சசிகுமாா் தலைமையில் நடைபெற்றது.
கணிதத்துறை தலைவா் சாந்தி, நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளா் வே. மகேஸ்வரி முன்னிலை வகித்தனா்.
கணிதத்துறை பேராசிரியா் இளவரசன், கணினி அறிவியல் துறை பேராசிரியா் தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனா்.
போட்டி நடுவா்களாக எஸ்.எஸ்.பி.பாலிடெக்னிக் கல்லூரி கணினி அறிவியல் துறை பேராசிரியா் ஆா். விக்னேஷ், கணிதத் துறை பேராசிரியா்கள் எஸ். ராஜேஸ்வரி, எஸ். கலைவாணி ஆகியோரும், அவியல் போட்டி நடுவா்களாக மொரராஜ், கணினி அறிவியல் துறைத் தலைவா் எம். பிரியா, பேராசிரியா் பா. அசோக் ஆகியோா் செயல்பட்டனா்.