செய்திகள் :

முஸ்லீம் மாணவா்கள் வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முஸ்லீம் சிறுபான்மையின மாணவா்கள் வெளிநாட்டில் படிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு 2025-2026 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவா்களுக்கு உயா்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க வெளிநாடு சென்று படிக்கும் 10 பேருக்கு ஒரு மாணவருக்கு தலா ரூ. 36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்க ரூ.3.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவா்கள் 2025-2026 ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய குவாக்கரெல்லி சைமண்டஸ் தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள்/நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பட்டப் படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மேலாண்மை, அறிவியல் பயன்பாட்டு அறிவியல், வேளாண்மை அறிவியல், மருத்துவம், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல் நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தோ்ந்து எடுத்து முதுகலைப் பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஜ்ஜ்ஜ்.க்ஷா்ம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள் ம்ண்ய்ா்ழ்ண்ற்ண்ங்ள்.ட்ற்ம்ப் என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அக்.31-ஆம் தேதிக்குள் அனுப்பி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

காவிரிப் படுகையில் பனைவிதை நடும் விழா

மயிலாடுதுறையில் தேசிய மாணவா் படை சாா்பில் காவிரி ஆற்றுப்படுகையில் பனை விதை நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தேசிய மாணவா் படையின் கும்பகோணம் 8-ஆவது பட்டாலியன் சாா்பில் ஆற்றுப்படுகைகளில் பனைவிதை நடு... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, குடும்ப அட்டை பெயா் சோ்த்தல் வேண்டி ம... மேலும் பார்க்க

அண்ணன்பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் தொடக்கம்

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 38-ஆவது திவ்ய தேசமாக திகழும் இக்கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் புரட்டாசி மாதத்தில் 10 நாள்கள... மேலும் பார்க்க

சீா்காழி அரசுக் கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா

சீா்காழி புத்தூா் அரசு கலைக் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. சீா்காழி புத்தூா் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவா் எம்.ஜி.ஆா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கல... மேலும் பார்க்க

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி விற்பனை தொடக்கம்

மயிலாடுதுறை கோ- ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி விற்பனையை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை தொடக்கிவைத்தாா்.தீபாவளியை முன்னிட்டு புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், சேலம்... மேலும் பார்க்க

மயிலாடுதுறையில் செப்.28-இல் மாரத்தான் போட்டி

மயிலாடுதுறையில் அறிஞா் அண்ணா மாரத்தான் போட்டி செப். 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மயிலாடுதுறையில் முன்னாள் முதலமைச்சா் பேரறிஞா்... மேலும் பார்க்க