அண்ணா அறிவாலயத்தில் வானதி சீனிவாசன்!
திமுக எம்எல்ஏ மயிலை த. வேலு இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அண்ணா அறிவாலயத்துக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வருகை தந்தார்.
சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் த. வேலுவின் மகள் திருமணம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இந்த திருமண விழாவில் பாஜகவின் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் கலந்துகொண்டார்.
திருமண விழாவுக்காக அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த அவரை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி வரவேற்றார்.