செய்திகள் :

``அண்ணாமலை ஏதாவது பேசிவிட்டு, வாபஸ் வாங்குவார்.. தி.மு.க-வை அசைக்க முடியாது'' -அமைச்சர் கீதாஜீவன்

post image

கன்னியாகுமரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் துறை சார்பாக நாகர்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டார். இதில் கலெக்டர் அழகுமீனா, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்த தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழக முதல்வர் பொறுப்பேற்ற 15 நாள்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்புக்கு  முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டார். பொதுவாக சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பாக வெளியே சொல்வதற்கு தயங்குகிறார்கள். பிரச்னை ஆனபிறகுதான் பெற்றோருக்கே தெரிய வருகிறது. பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்களது பிரச்னைகள் குறித்து உடனடியாக பெற்றோர் மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

விருதுநகர் மாவட்டத்தில் ஒரு லட்சம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிக புகார்கள் வருவதால் அதிக குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். இதுவரை வெளிவராத தகவல்கள் கூட இப்போது வெளியே வருகின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தி வருகிறார். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நன்கு தெரிந்தவர்கள் மூலமாக தான் அதிக துன்புறுத்தல்கள் வருகின்றன. செல்போன் போன்ற பொருள்களை பாதுகாப்பாக கையாள வேண்டும்.

பெண்களுக்கு பரிமாறும் அமைச்சர் கீதா ஜீவன்

அண்ணா அறிவாலயத்தின் செங்கல்களை உருவுவேன் என அண்ணாமலை சவடால் பேசி வருகிறார். அண்ணாமலை ஏதாவது பேசிவிட்டு பின்னர் வாபஸ் வாங்குவார். அவர் சொன்னதை எதையும் சாதித்ததில்லை. தி.மு.க-வை அழிப்பேன் என அவரைப் போல பேசியவர்கள் அழிந்தது தான் சரித்திரம். தி.மு.க-வை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது. த.வெ.க குழந்தைகள் அணி குறித்து எந்த கருத்தும் கூறவிரும்பவில்லை. மணிப்பூரில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டவருக்கு பாலியல் உள்ளிட்ட வெளியே சொல்லமுடியாத வகையில் துன்புறுத்தல் இழைக்கப்பட்டன. பா.ஜ.க முதல்வரால் அதை கட்டுப்படுத்த முடியாமல் மணிப்பூர் தவிக்கும் நிலையில், அதை சரி செய்த பின்பு தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து பா.ஜ.க பேசட்டும். நடிகர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது நல்லதுதான். மக்களோடு மக்களாக பயணித்தால்தான் மக்கள் பிரச்னைகளை அறிய முடியும்" என்றார்.

Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் வயிற்று உப்புசம்... என்னதான் காரணம், எப்படி சரிசெய்வது?

Doctor Vikatan: என்வயது 34. சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். நார்ச்சத்துக்காக காய்கறிகளும், புரதச்சத்துக்காகபருப்பு உணவுகளும்எடுத்துக்கொள்ளும்படிஎன்னை மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், இந்த இரண்டுமே எனக்க... மேலும் பார்க்க

Udhayanidhi Stalin: ``யார் அரசியல் செய்வது?'' -மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உதயநிதி ஆதங்கம்!

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இ... மேலும் பார்க்க

``உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது'' - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய பா.ஜ.க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

UP: ``ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' - மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்து... மேலும் பார்க்க

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந... மேலும் பார்க்க