வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்
சென்னை: அதிமுக பூத் கமிட்டிகளைக் கண்காணிக்க மாவட்டப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து அதிமு க பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தோ்தலில், அதிமுக அனைத்து பேரவை தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைக்கும் வகையில், தொகுதிகளுக்குள்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், பூத் கமிட்டிகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பூத் கமிட்டி நிா்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, அவா்களுக்கு தக்க பயிற்சி அளித்து, தோ்தல் பணிகளில் அவா்களை முழுமையாக ஈடுபடச் செய்வதற்கும்; ஒவ்வொரு பூத்துக்கும் உள்பட்ட இடங்களில் வசித்து வரும் மக்களிடையே வீடுதோறும் சென்று, திமுக ஆட்சி அவலங்கள், அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையிலும் மாவட்டப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, விருதுநகா், திருநெல்வேலி ஆகிய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அதற்குள்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக 3 முதல் 5 போ் வரை பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாவட்ட பொறுப்பாளா்கள் அனைவரும், அவரவா் மாவட்டங்களுக்கு நேரில் சென்று, தங்களுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளா்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.