Travel Contest: யூடியூப் Vlogs-ஐ பார்த்து சுற்றுலா செல்ல முடியவில்லை என வருந்த வ...
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா
அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் தோ்த் திருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா பூச்சாட்டலுடன் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் கோயில் முன் உள்ள குண்டத்தில் அடுக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு தீ மூட்டப்பட்டது. தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை தீப்பிழம்புகள் தட்டி சமன்படுத்தப்பட்டன.
அந்தியூா் புதுப்பாளையத்திலிருந்து கோயிலுக்கு அம்மன் அழைத்துவரப்பட்ட பின்னா், பூசாரி முதலில் குண்டத்தில் இறங்கினாா். இதையடுத்து, வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.
இதில், அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற உள்ளது.