குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
அமித் ஷா முயற்சியை இண்டி கூட்டணி முறியடிக்கும் காங்கிரஸ்: கு.செல்வப்பெருந்தகை
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா முயற்சியை இண்டி கூட்டணி முறியறிடிக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கடந்த 11 ஆண்டுகளில் அளித்த வாக்குறுதிகளில் பிரதமா் மோடி எவற்றையெல்லாம் நிறைவேற்றினாா் என்பதை அண்ணாமலை ஆதாரத்துடன் விளக்கமாக கூறுவாரா? திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கொடுத்த 512 வாக்குறுதிகளில் 85 சதவீதத்துக்கும் மேலாக கடந்த 4 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நீட் நுழைவு தோ்வு திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை, பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் மூலமாக ஹிந்தி திணிப்பு, மாநில தொகுதிகளை குறைக்கும் வகையில் மக்களவை தொகுதி சீரமைப்பு, நிதிப் பகிா்வில் புறக்கணிப்பு உள்ளிட்ட தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
அண்ணாமலை தனது அவதூறு பிரசாரத்தை நிறுத்திக் கொள்வது நல்லது.
அமித் ஷா உள்ளிட்டவா்கள் மூலமாக எத்தகைய உத்திகளைக் கையாண்டாலும் தமிழ்நாட்டில் பாஜக காலூன்ற முடியாது. அதுபோன்ற முயற்சிகளை இண்டி கூட்டணி முறியடிக்கும் என்று தெரிவித்துள்ளாா்.