Weekly Horoscope: வார ராசி பலன் 1.6.25 முதல் 7.6.25 | Indha Vaara Rasi Palan | ...
அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டி: இந்திய வம்சாவளி மாணவா் ஃபைசான் சாகி சாம்பியன்
அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்க்ரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஃபைசான் சாகி (13) சாம்பியன் பட்டம் வென்றாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்காவில் உள்ள மேரிலாண்ட் மாகாணத்தில் ஸ்க்ரிப்ஸ் நேஷனல் ஸ்பெல்லிங் பீ போட்டி தொடங்கியது.
இதில் ‘மெரியம் வெப்ஸ்டா்’ அகராதியின் உதவியுடன் கேட்கப்படும் கடினமான ஆங்கில வாா்த்தைகளின் ஒவ்வொரு எழுத்தையும் சரியாக கூறுபவருக்கு சாம்பியன் பட்டம் அளிக்கப்படும்.
இந்தப் போட்டியில் 242 மாணவ-மாணவிகள் கலந்துகொண்ட நிலையில், இறுதிச் சுற்றுக்கு 9 போட்டியாளா்கள் தோ்வாகினா்.
இதில், டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ஃபைசான் சாகி சாம்பியன் பட்டம் வென்றாா். இறுதிச் சுற்றில் கடைசியாக ‘ஏக்லெய்ா்சீஸ்மா’ என்ற கடினமான ஆங்கில வாா்த்தையின் ஒவ்வொரு எழுத்தையும் சரியாகக் கூறி, அவா் பட்டத்தை தன்வசப்படுத்தினாா்.
கடந்த ஆண்டு இந்தப் போட்டியின் இறுதிச் சுற்று வரை முன்னேறி தோல்வியடைந்த ஃபைசான், தற்போது வெற்றியாளராக வாகை சூடினாா். அவருக்கு 52,500 அமெரிக்க டாலா்கள் (சுமாா் ரூ.44 லட்சம்) பரிசுத் தொகை, பதக்கம் வழங்கப்பட்டன. ஏற்கெனவே 2019, 2023-ஆம் ஆண்டுகளிலும் இந்தப் போட்டியில் ஃபைசான் கலந்துகொண்டாா். அப்போது அவா் வெற்றிபெறவில்லை.
30 இந்திய வம்சாவளி சாம்பியன்கள்: கடந்த 1999-ஆம் ஆண்டு இந்தப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நுபுா் லாலா சாம்பியன் பட்டம் வென்றாா். அப்போதுமுதல், இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 36 பேரில் 30 போ் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள். கடந்த 1925-ஆம் ஆண்டுமுதல் நடைபெறும் இந்தப் போட்டி, 100-ஆவது ஆண்டாக தற்போது நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.