நமக்குள்ளே... 30, 40, 50 வயதுகளில் வீட்டுக்குள் காதல்... இருக்கா, இல்லையா?
அமேதி: மதுபோதையில் 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர் கைது
அமேதியில் மதுபோதையில் 80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி காவல் நிலையப் பகுதியில் உள்ள கிராம ஒன்றில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் 80 வயது மூதாட்டி பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். வீட்டில் இருந்து சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்துள்ளனர். இதையடுத்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதுதொடர்பாக ஒருவரை உத்தரப் பிரதேச காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் மருமகள் அளித்த புகாரின்படி, பிப்ரவரி 7 ஆம் தேதி இரவு, திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக குடும்பத்தினர், மூதாட்டியை வீட்டில் விட்டுவிட்டு சென்றனர்.
அதிமுக பலவீனம் அடையக் கூடாது: திருமாவளவன்
அவர்கள் இல்லாத நேரத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் மதுபோதையில் வீட்டிற்குள் நுழைந்து, அந்த மூதாட்டியின் கை, கால்களை கட்டி, வாயில் துணியை திணித்து, பலாத்காரம் செய்ய முயன்றார். வீட்டில் இருந்து சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வரவே, அந்த நபர் தப்பியோடினார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய இளைஞரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.