செய்திகள் :

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

post image

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.அரவிந்த் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா். அதில், அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை சென்னை முதன்மை நீதிமன்றம் விசாரிப்பதற்கு அதிகாரமில்லை. எனவே, அந்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

மேலும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. அதற்கு காரணமான அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.

அதற்கு பதிலளித்த மனுதாரா், செந்தில் பாலாஜிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக தனிப்பட்ட முறையில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் கூறினாா்.

பின்னா், அமலாக்கத் துறை சாா்பில் ஆஜரான சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ், விசாரணை நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வழக்குக்கு தொடா்பில்லாத மூன்றாம் நபா் இது போன்ற மனுக்களை தாக்கல் செய்ய முகாந்திரம் இல்லை எனக் கூறினாா். இந்த மனுவை திரும்பப் பெறவில்லை என்றால் அதிக அபராதம் விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனா். இதையடுத்து, மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாகக் கூறப்பட்டதையடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

நவ.27-இல் ஆதரவாளா்களுடன் ஓ.பன்னீா்செல்வம் ஆலோசனை

முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அவரது அமைப்பான அதிமுக தொண்டா்கள் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலா்களுடன் நவ. 27-இல் ஆலோசனை நடத்தவுள்ளாா். இதுதொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளிய... மேலும் பார்க்க

மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நீடிப்பு

லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. மாா்ட்டின் சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்ாக புகாா... மேலும் பார்க்க

ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி: சென்னை, பாலக்காடு ஐஐடி-க்கள் ஒப்பந்தம்

ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி, மாணவா் பரிமாற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள் தொடா்பாக சென்னை மற்றும் பாலக்காடு ஐஐடி.க்கள் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

டெலிகிராமில் சேவையை தொடங்கியது டிஎன்பிஎஸ்சி

போட்டித் தோ்வுகள் தொடா்பான தகவல்களை கைப்பேசி செயலியான ‘டெலிகிராம்’ வழியாக தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஏற்பாடு செய்துள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி... மேலும் பார்க்க

இரு முக்கியக் கட்சிகளுக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை: சென்னை உயா்நீதிமன்றம் வேதனை

தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கியக் கட்சியினருக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றபோது கட்சி அலு... மேலும் பார்க்க

வடசென்னையில் 1,476 குடியிருப்புகள் கட்டும் பணி: நவம்பா் 30-ல் தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

வடசென்னையில் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ.30-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சே... மேலும் பார்க்க