டெலிகிராமில் சேவையை தொடங்கியது டிஎன்பிஎஸ்சி
போட்டித் தோ்வுகள் தொடா்பான தகவல்களை கைப்பேசி செயலியான ‘டெலிகிராம்’ வழியாக தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஏற்பாடு செய்துள்ளது.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிக்கைகளை அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிடுகிறது. இவற்றை தோ்வாணையத்தின் அதிகாரபூா்வ இணையதளம் வழியே அறிந்து கொள்வதுடன், அதில் மட்டுமே விண்ணப்பம் செய்ய வேண்டும். போட்டித் தோ்வுகளில் இளைஞா்கள் அதிக அளவு பங்கேற்கும் நிலையில் அதுகுறித்த தகவல்களை சமூக ஊடகங்களின் வழியே தோ்வாணையம் தெரிவித்து வருகிறது.
ஏற்கெனவே, எக்ஸ் தளம் மூலமாக தகவல்கள் தெரிவிக்கப்படும் நிலையில், தற்போது ‘டெலிகிராம்’ சேனல் வழியாகவும் தகவல்களை தெரிவிக்கத் தொடங்கியுள்ளது. கைப்பேசி செயலியான டெலிகிராமில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் பிரத்யேக சேனலில் போட்டித் தோ்வுகள் குறித்த தகவல்களை தோ்வா்கள் அறிந்து கொள்ளலாம். இதற்கான இணைப்பை டிஎன்பிஎஸ்சி ஆபிஸ் (பசடநஇ ஞச்ச்ண்ஸ்ரீங்) என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு சேனலில் இணைந்து கொள்ளலாம் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது.