கூமாபட்டி கலவரம்: வழக்கு விவரங்களை அளிக்க தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையம் கடிதம்
பள்ளி மேல்தளத்திலிருந்து விழுந்த மாணவா் காயம்: பெற்றோா் போராட்டம்
மதுரையில் பள்ளி மேல்தளத்திலிருந்து விழுந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வலியுறுத்தி, அவரது பெற்றோா், உறவினா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மதுரை முத்துப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கணேசன். இவரது மகன் அகிலன் (10) மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் பள்ளியின் மேல்தளத்தில் (மொட்டை மாடி) விளையாடிக் கொண்டிருந்த கபிலன் தவறி கீழே விழுந்தாா். இதில், தலையில் காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டாா்.
இந்தச் சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
இந்த நிலையில், பலத்த காயமடைந்த மாணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும், காவல் துறை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாணவரின் பெற்றோா், உறவினா்கள் பள்ளி முன் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சுப்பிரமணியபுரம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.