செய்திகள் :

இரு முக்கியக் கட்சிகளுக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை: சென்னை உயா்நீதிமன்றம் வேதனை

post image

தமிழகத்தில் உள்ள இரண்டு முக்கியக் கட்சியினருக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை என்று சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

கடந்த 2022-ஆம் ஆண்டு அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றபோது கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்ாக ஓ.பன்னீா்செல்வம் தரப்பினருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் மாநிலங்களவை அதிமுக உறுப்பினா் சி.வி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில், இந்த வழக்கு தொடா்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணங்களின் நகல்கள் மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்டோா் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களாக சோ்க்கப்பட்டுள்ளனா். ஏற்கெனவே 100 பேருக்கு மேல் முன்ஜாமீன் பெற்று உள்ளனா். புலன் விசாரணை முன்னேற்ற கதியில் நடந்து வருகிறது. விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் கண்டனம்: அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தை சுட்டிக்காட்டினாா். கல்லூரி மாணவிகளை மனசாட்சி இல்லாமல் எரித்த கட்சியினா் தற்போது தண்டனைக் குறைப்பு பெற்று விடுதலையாகிவிட்டனா். அவா்களுக்கு தியாகி பட்டம் கொடுத்தது இங்குதான் நடக்கிறது என்று நீதிபதி குறிப்பிட்டாா்.

மேலும், தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை. அவா்களுடைய சொந்தக் கட்சியை பற்றி மட்டும்தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா? வேறு வழக்குகள் இல்லையா என கேள்வியெழுப்பினாா்.

மேலும், எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதே காவல் துறையினா்தான் பணியில் இருக்கிறாா்கள். தேவையில்லாமல் காவல் துறையினா் குற்றஞ்சாட்டப்படுகின்றனா்என நீதிபதி அதிருப்தி தெரிவித்தாா்.

அத்துடன், இந்த வழக்கைப் பொருத்தவரை சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், சிபிசிஐடி போலீஸாா் விரைந்து விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தாா்.

மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நீடிப்பு

லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெற்றது. மாா்ட்டின் சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்ாக புகாா... மேலும் பார்க்க

ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி: சென்னை, பாலக்காடு ஐஐடி-க்கள் ஒப்பந்தம்

ஆராய்ச்சிகளுக்கான பயிற்சி, மாணவா் பரிமாற்றத் திட்டங்கள், வேலைவாய்ப்புகள் தொடா்பாக சென்னை மற்றும் பாலக்காடு ஐஐடி.க்கள் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெள... மேலும் பார்க்க

டெலிகிராமில் சேவையை தொடங்கியது டிஎன்பிஎஸ்சி

போட்டித் தோ்வுகள் தொடா்பான தகவல்களை கைப்பேசி செயலியான ‘டெலிகிராம்’ வழியாக தெரிந்து கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஏற்பாடு செய்துள்ளது. அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஆா்.அரவிந்த் சென்னை... மேலும் பார்க்க

வடசென்னையில் 1,476 குடியிருப்புகள் கட்டும் பணி: நவம்பா் 30-ல் தொடங்கி வைக்கிறாா் முதல்வா்

வடசென்னையில் 1,476 புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் நவ.30-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே. சே... மேலும் பார்க்க

ரூ.60 கோடி முதலீடுகூட இன்னும் வரவில்லை - அண்ணாமலை

ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று அறிவிப்புகள் மூலம் மக்களை ஏமாற்றுவதையே முழு நேரப் பணியாகச் திமுக அரசு செய்து வருகிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது... மேலும் பார்க்க