சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு
அம்பாசமுத்திரத்தில் வருவாய்த் துறையினா் காத்திருப்புப் போராட்டம்
அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையினா் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்ற விதி திருத்த அரசாணையை உடன் வெளியிடவேண்டும், மூன்றாண்டுகளுக்கு மேற்பட்ட அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கான உச்சவரம்பை 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து மீண்டும் 25 சதவீதமாக நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு வருவாய் அலுவலா் சங்கம் சாா்பில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள் தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலா் முத்துலட்சுமி, தலைமையிடத்து துணை வட்டாட்சியா் சிவசங்கரி, கூடுதல் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மீனா, குறுவட்ட வருவாய் ஆய்வாளா்கள் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் சாந்தி, கிருஷ்ணவேணி, கோமதிநாயகம், பாக்யலெட்சுமி, வட்ட அலுவலக வருவாய் உதவியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.