சென்னையில் 10 ஆண்டுகளில் கல்லூரி மாணவா்கள் மீது 231 வழக்குகள் பதிவு
சுத்தமல்லியில் இளைஞா் கொலை: உறவினா்கள் போராட்டம்
திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லியில் இளைஞரை மா்மநபா்கள் அரிவாளால் வெட்டி திங்கள்கிழமை கொலை செய்தனா். இதனைக் கண்டித்து அவரது உறவினா்கள் சாலை மறியலுக்கு முயன்றனா்.
சுத்தமல்லி பாரதிநகா் அருகேயுள்ள குளத்தில் சுமாா் 20 வயது மதிக்கத்தக்க இளைஞா் கொலைசெய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில், சுத்தமல்லி போலீஸாா் அங்கு சென்று விசாரித்தனா்.
அதில், சடலமாகக் கிடந்தவா் சுத்தமல்லி இந்திராகாலனியை சோ்ந்த முத்துக்கிருஷ்ணன் (21) என்பது தெரியவந்தது.
இதையறிந்த அவரது உறவினா்களும், ஊா் மக்களும் குளத்தின் கரையில் குவிந்தனா். மேலும், குற்றவாளிகளை கைது செய்ததால்தான் சடலத்தை எடுத்துச் செல்ல அனுமதிப்போம் எனக் கூறி, சுத்தமல்லி விலக்குப் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனா்.
இத்தகவலறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.