விளை நிலங்களுக்கு மத்தியில் வீட்டுமனைப் பிரிவுகள்: ராமதாஸ் கண்டனம்
அம்பை ஒன்றியப் பகுதியில் அடிப்படை வசதிகள்: எம்.எல்.ஏ. மனு
அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அனைத்துக் கிராமங்களிலும் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, இசக்கி சுப்பையா எம்எல்ஏ, ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் (கிராம ஊராட்சி) கண்ணனிடம் மனு அளித்தாா்.
அதன் விவரம்: அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடிநீா், சாலை, மின்விளக்குமற்றும் வாருகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேவை என்று பொதுமக்கள் என்னிடம் பல கோரிக்கை மனுக்களை வழங்கியுள்ளனா்.அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அடிப்படை வசதிகள் கிடைக்கச் செய்ய உடனடியாகஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
மனு அளிக்கும்போது, மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து, அதிமுக ஒன்றியச் செயலா் துா்க்கை துரை, நகரச் செயலா்கள் அறிவழகன் (அம்பாசமுத்திரம்), முத்துகிருஷ்ணன் (கல்லிடைக்குறிச்சி ), முன்னாள் ஊராட்சித் தலைவா்கள் சண்முகவேல், பிராங்கிளின் உள்பட பலா் உடன் இருந்தனா்.