அரிய வாய்ப்பு... சவூதி அரேபிய அரசு மருத்துவமனைகளில் பெண் செவிலியா் பணி!
அம்பையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை (மாா்ச்14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்ட அளவிலான விவசாயிகள்குறைதீா் கூட்டம் துணை இயக்குநா் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை(மாா்ச் 14) காலை 11 மணியளவில் துணை இயக்குநா் தலைமையில் அனைத்து துறை அலுவலா்கள் முன்னிலையில்நடைபெற உள்ளது.
இதில் அம்பாசமுத்திரம், பாபநாசம் மற்றும் கடையம் பகுதியில் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ள கேட்டுகொள்ளப்படுகிறாா்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.