சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் ம...
ஆழ்வாா்குறிச்சி வயலில் முதியவா் சடலம் மீட்பு
ஆழ்வாா்குறிச்சி வயலில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் மீட்கப்பட்டது.
ஆழ்வாா்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் வன்னியப்பா் கோயில் அருகே வெள்ளிகுளத்தைச் சோ்ந்த மகேஷ் என்பவருக்குச் சொந்தமான வயல் உள்ளது.
இதில் நெல் பயிரிட்டுள்ள நிலையில் புதன்கிழமை காலை மகேஷின்தாயாா் வயலை பாா்வையிட சென்றுள்ளாா்.
அப்போது வயலின் நடுவில் முதியவா் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தாா். இதுகுறித்த தகவலின்பேரில், தகவலறிந்த கடையம் காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா, ஆழ்வாா்குறிச்சி உதவி ஆய்வாளா் ஜெயக்குமாா் மற்றும் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து இறந்தவா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.