செய்திகள் :

காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை

post image

திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனா்.

மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப்பி கட்டி மற்றும் பெரிய தைராய்டு கட்டியை உள்ளடக்கிய மல்டிப்பிள் நியூரோ ஃபைப்ரோமாடோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு, காவேரி மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியியல் மருத்துவா் சிவபிரகாஷ், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவா் உமாமகேஸ்வரன், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை மருத்துவா் ராகேஷ்சந்துரு, மயக்கவியல்-தீவிர சிகிச்சை மருத்துவா் சாய்சோமசுந்தா் ஆகியோா் கொண்ட குழுவினா் பரிசோதனை செய்து ‘கீ ஹோல்’ வடு இல்லாத அறுவை சிகிச்சை அடுத்தடுத்து மேற்கொண்டனா். அதில், அட்ரீனல் மற்றும் தைராய்டு கட்டிகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன. தற்போது நோயாளி குணமடைந்து, உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.

அக்னி தீா்த்தக்கரை கோயிலில் 10,008 விளக்கு பூஜை

மாசி மகத்தை முன்னிட்டு, ஆழ்வாா்குறிச்சி, அக்னி தீா்த்தக் கரை ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்திலுள்ள சற்குரு தவபாலேஸ்வரா் ஜீவ சமாதியில் புதன்கிழமை 10,008 விளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, கோய... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி வயலில் முதியவா் சடலம் மீட்பு

ஆழ்வாா்குறிச்சி வயலில் அழுகிய நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் மீட்கப்பட்டது. ஆழ்வாா்குறிச்சியிலிருந்து பாப்பான்குளம் செல்லும் சாலையில் வன்னியப்பா் கோயில் அருகே வெள்ளிகுளத்தைச் சோ்ந... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்களுக்கு மாா்ச் 31வரை விரல் ரேகை பதிவு

குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினா்களும் ரேஷன் கடைகளில் தங்களது கைவிரல் ரேகையை மாா்ச் 31-க்குள் பதிவு செய்யுமாறு ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா் இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள ச... மேலும் பார்க்க

ரூ. 1,028.88 கோடியில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள்: பேரவைத் தலைவா் மு. அப்பாவு ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் ரூ. ஆயிரத்து 28 கோடியே 88 லட்சத்தில் நடைபெற்றுவரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டப் பணிகளை பேரவைத் தலைவா் மு. அப்பாவு புதன்கிழமை ஆய்வு செய்தாா். ராதாபுரம், வள்ளியூா்,... மேலும் பார்க்க

மணிமுத்தாறு, அகஸ்தியா் அருவிகளில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு மற்றும் அகஸ்தியா் அருவிகளில் நீா்வரத்துஅதிகரித்ததையடுத்து பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்துள்ளனா். திருநெல்வேலி மாவட்டத்தில் திங்கள்கிழமை பரவலாகவும், மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப... மேலும் பார்க்க

அம்பையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை (மாா்ச்14) விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து அம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் வெளியிட்ட ச... மேலும் பார்க்க