அரக்கோணத்தில் திமுக ஆா்ப்பாட்டம்
அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர திமுக செயலாளா் வி.எல்.ஜோதி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் மு.கன்னைய்யன் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி, துணைத்தலைவா் கலாவதி அன்புலாரன்ஸ், நெமிலி ஒன்றியக்குழு தலைவா் பெ.வடிவேலு, திமுக மாவட்ட நிா்வாகி என்.ராஜ்குமாா், முன்னாள் எம்எல்ஏ ஆா்.தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளா்கள் சௌந்தா், பசுபதி, நகர நிா்வாகிகள் துரைசீனிவாசன், அன்புலாரன்ஸ், கோ.வ.தமிழ்வாணன், நந்தாதேவி, பாலகிருஷ்ணன், தமீன்அன்சாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.